நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படம் ஜெயிலர். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, யோகிபாபு, விநாயகன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அது இளம் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தான். இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான டான் படத்தை இயக்கியவர் ஆவார். டான் படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார், அப்படம் மிகவும் பிடித்துப் போனதால் சிபியை அழைத்து கதை கேட்டாராம். அவர் சொன்ன கதையும் பிடித்துப் போனதால் தனது அடுத்த பட வாய்ப்பை வழங்கி உள்ளாராம் ரஜினி.