தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, சிவகுமாரின் வாரிசு நடிகராக இருந்தும் சினிமாவில் வெற்றியை அவ்வளவு எளிதில் ருசித்துவிடவில்லை. சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய சூர்யா, இன்று சினிமாவை தாண்டி சமூகத்திலும் தனக்கான ரசிகர்களை விரிவுபடுத்தி இருக்கிறார். வஸந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமான சூர்யாவுக்கு அடுத்தடுத்த படங்கள் பெயர் சொல்லும் அளவுக்கு அமையவில்லை.
2001-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படம் தான், சூர்யாவுக்குள் இருக்கும் ஒரு சிறந்த நடிகரை வெளி உலகத்துக்கு காட்டியது. இதனால் அனைவரது பாராட்டையும் பெற்றார். நந்தா திரைப்படத்துக்கு பின்னர் வரிசையாக வெளிவந்த காக்க காக்க, ஆயுத எழுத்து, மெளனம் பேசியதே, கஜினி, அயன், சிங்கம், ஆறு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை சூர்யாவுக்கு பெற்றுக் கொடுத்தது.
நடிக்கவே தெரியவில்லை, நடனமாட தெரியவில்லை இவரெல்லாம் ஹீரோவா என நேருக்கு நேர் படத்தில் விமர்சனங்களை எதிர்கொண்ட சூர்யா, தன்னைத் தானே செதுக்கி இன்று சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற படங்களில் நடிப்பின் நாயகனாக மிளிர்ந்து தேசிய விருதை வெள்ளும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு அவரது கடின உழைப்பே காரணம். அகரம் என்கிற அறக்கட்டளையை நடத்தி வரும் சூர்யா, அதன்மூலம் எண்ணற்ற ஏழை மாணவர்களை சிகரம் தொட வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... மாஸ் லுக்கில் மிரட்டும் சூர்யா! வெளியானது கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோ! ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்!!
இப்படி சினிமாவிலும், ரியல் லைஃபிலும் ஹீரோவாக ஜொலித்து வரும் சூர்யா ரூ.188 கோடி சொத்துக்கு அதிபதியாகவும் உள்ளார். சென்னை மற்றும் மும்பையில் சொகுசு வீடுகள் வைத்துள்ளார் சூர்யா. இந்த வீடுகளில் ஜிம் முதல் நீச்சல் குளம் வரை சகல வசதிகளும் உள்ளனவாம். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்து வரும் சூர்யா, தன்னுடைய 2டி நிறுவனம் மூலம் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
நடிகர் சூர்யா, தற்போது ஒரு படத்துக்கு ரூ.40 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். இதுதவிர விளம்பரங்களில் நடிக்க ரூ.2 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். கார்கள் மீது ஆர்வம் கொண்ட சூர்யா, ஏராளமான சொகுசு கார்களையும் வாங்கியுள்ளார். அவரிடம் ரூ.1.3 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் 730Ld, ரூ.80 லட்சம் மதிப்பிலான ஆடி Q7, ரூ.60 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் M கிளாஸ், ரூ.1.1 கோடி மதிப்பிலான ஜாகுவார் XJ L போன்ற கார்கள் உள்ளன.
இதுதவிர ஏராளமான தொழில்களையும் செய்து அதன் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் சூர்யா. இந்நிலையில், இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் சூர்யாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... இரண்டாம் வாரத்திலும் அசத்தும் மாவீரன்.. சிவகார்த்திகேயன் மாவீரனாக உருவானது எப்படி? வைரலாகும் வீடியோ!