பழம்பெரும் நடிகர்... காதல் மன்னன் ஜெமினி கணேசனின் மகளும், பாலிவுட் நடிகையுமான ரேகாவின் தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு மர்மங்கள் நிறைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ரேகா பல முன்னனி நடிகர்களின் காதல் சர்ச்சையில் சிக்கியவர். அதிலும் குறிப்பாக, அமிதாப் பச்சன், வினோத் மெஹ்ரா, ஜித்தேந்திரா, சத்ருகன் சின்ஹா, அக்ஷய் குமார், சஞ்சய் தத், கமல்ஹாசன், ஆகியோர் இந்த லிஸ்டில் அடக்கம்.