மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக மாறியவர் மஞ்சிமா மோகன். தன்னுடைய கொழுக்கு... மொழுக்கு அழகால் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு, மிகவும் பிரமாண்டமாக இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் நடந்து முடிந்த நிலையில், மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு முன்பு நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே நடித்து முடித்தார். திருமணத்திற்கு பின்னர் எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை. மேலும் அவ்வப்போது, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
திருமணத்தின் போதும்... திருமணத்திற்கு பிறகும் கொஞ்சம் உடல் எடை கூடி காணப்பட்ட மஞ்சிமா மோகன், தற்போது தீவிர ஒர்க் அவுட் செய்து, உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.