'நாதஸ்வரம்' சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராஜ்கிரண் மகள் ஜீனத்..! வைரலாகும் புகைப்படம்!

First Published | Sep 7, 2022, 5:24 PM IST

'நாதஸ்வரம்' சீரியல் மூலம் பிரபலமான நடிகரை facebook மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் பிரபல நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத். தற்போது இவர்களது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
 

சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று 'நாதஸ்வரம்'.  இந்த சீரியலில் சம்மந்தம் என்கிற காமெடி ரோலில், உடல் மொழியாலும் நடித்து மிகவும் பிரபலமானவர் முனீஸ் ராஜா. 

பிரபல சீரியல் நடிகர் சண்முக ராஜாவின் உடன் பிறந்த சகோதரரான இவர், எந்த ஒரு இடத்திலும் தன்னுடைய சகோதரர் பெயரை பயன்படுத்தாமல் தன்னுடைய நடிப்பு திறமையால் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று, ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார்.

மேலும் செய்திகள்: Breaking: இரண்டாவது திருமணத்தை மறைத்து நாடகம் ஆடிய அமலாபால்! நீதிமன்றத்தில் ஆதாரத்தை காட்டிய பவ்நிந்தர் சிங்!
 

Tap to resize

மிகவும் எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு... முள்ளும் மலரும் என்கிற சீரியலில் கதாநாயகனாகவும் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும் சித்தி 2 சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து, சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் முனிஷ் ராஜா.

இந்நிலையில் இவருக்கு பிரபல நடிகர் ராஜ்கிரண் மகள், ஜீனத்... சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த இவர்கள், பின்னர் காதலிக்க துவங்கியுள்ளனர். பின்னர் தங்களது காதலை, இருவரும் வீட்டில் கூறி சம்மதம் பெற முயற்சித்த நிலையில்... ஒரு சில காரணங்களால் இவர்கள் காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும் செய்திகள்: விஜே விக்னேஷ்காந்த் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்திய சிவகார்த்திகேயன்..! வைரலாகும் வெடிங் போட்டோஸ்!
 

பின்னர் பிள்ளைகளின் ஆசைக்காக இவர்களது காதலை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் ராஜ்கிரண் மனைவி மட்டும் தற்போது வரை இவர்கள் திருமண விஷயத்தில் சமாதானம் ஆகவில்லை என கூறப்படுகிறது. ஜாதி, மதம், போன்றவற்றை கடந்து திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள முனிஷ் ராஜா - ஜீனத் தம்பதிக்கு தொடர்ந்து பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: சேலை அழகில்... சிக்கென இருக்கும் இடையை காட்டி இளசுகளை ஏங்க வைக்கும் கீர்த்தி ஷெட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

Latest Videos

click me!