சிகரெட் பிடிப்பதை விட்டுவிட சொன்ன எம்ஜிஆர்.! ரஜினி சொன்ன ருசிகர சம்பவம்

Published : Nov 24, 2024, 11:54 AM ISTUpdated : Nov 24, 2024, 11:58 AM IST

முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவில், அவரது தியாக வாழ்க்கையை ரஜினிகாந்த் பாராட்டினார். எம்ஜிஆருக்கு உறுதுணையாக இருந்தது முதல் கட்சியை விட்டுக் கொடுத்தது வரை ஜானகியின் பெருந்தன்மையை எடுத்துரைத்தார்.

PREV
14
சிகரெட் பிடிப்பதை விட்டுவிட சொன்ன எம்ஜிஆர்.! ரஜினி சொன்ன ருசிகர சம்பவம்

ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழா

தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சரும், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் மனைவியுமான ஜானகி ராமச்சந்திரன் அம்மையாரின் நூற்றாண்டு விழா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா மலரை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். எம்ஜிஆர் வளர்ப்பு மகள் சுதா விஜயக்குமார் விழா மலரை பெற்றுக் கொண்டார்,

இந்த நிகழ்ச்சியில் ஜானகி ராமச்சந்திரன் அவர்களுடன் பயணித்த நடிகை ராஜ ஶ்ரீ, நடிகை வெண்ணீராடை நிர்மலா, சச்சு, குட்டி பத்மினி உள்ளிட்டோருக்கு எடப்பாடி பழனிச்சாமி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார் 
 

24
Janaki MGR memoriel day

ஜானகி அம்மாள்- ரஜினி புகழாரம்

இந்த நிகழ்வில் ஜானகி ராமச்சந்திரன் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வீடியோ வெளியிடப்பட்டது. அதில் எம்ஜிஆருக்கு திரை வாழ்க்கையை தியாகம் செய்து கடைசி வரை எம்ஜிஆருக்கு உறுதுணையாக இருந்தவர் ஜானகி ராமச்சந்திரன். ராமாவரம் தோட்டத்துக்கு யார் சென்றாலும் வயிறு நிறைய விருந்து வைத்து உபசரித்தார். கட்சி நலனுக்காக கட்சியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி ராமச்சந்திரன், நான் மூன்று முறை அவரை நேரில் சந்தித்து உள்ளேன். ராகவேந்திரா படத்தின் போது அவரை சந்தித்தேன்

இரண்டாவது முறை அவர் முதலமைச்சராக இருந்த போது சந்தித்தேன். மூன்றாவது முறை நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது என்னை அழைத்து சந்தித்தார். அவர் கையால் காபி போட்டுக் கொடுத்து உபசரித்தார்.

34

சிகரெட் புகைப்பதை விட சொன்ன எம்ஜிஆர்

படங்களில் நான் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ஜானகி ராமச்சந்திரனிடம் எம்ஜிஆர் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார். அவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து தான். நான் அரசியலுக்கு வருவதாக முடிவு செய்து பலரிடம் ஆலோசனை கேட்டபோது பலரும் பல்வேறு கருத்துக்களை சொன்னார்கள். 

அதெல்லாம் கேட்டபோது பல்வேறு எண்ணங்கள் என் மனதில் ஏற்பட்டது. அரசியல் தெரிந்து சொல்கிறார்களா தெரியாமல் சொல்கிறார்களா என்று நான் யோசித்தேன். 
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார் ஒரு முடிவை எடுப்பதாக இருந்தால் அது உனக்கு மட்டும் சந்தோஷம் தருவதாக இருந்தால் எடுக்காதே, மற்றவர்களுக்கும் அதனால் சந்தோஷம் கிடைக்கிறதா என்பதை உணர்ந்துதான் எடுக்க வேண்டும்.

44
janaki mgr

பொறுப்புகளை ஒப்படைத்த ஜானகி

அந்த அடிப்படையில் ஜானகி ராமச்சந்திரன் தொண்டர்களின் சந்தோசம் தான் முக்கியம் என்று அதிமுகவின் பிரம்மாஸ்திரமான இரட்டை இலை உட்பட அனைத்து கட்சி பொறுப்புகள் உடமைகள் அனைத்தையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார். அது அவரின் நல்ல குணம். பக்குவத்தை உணர்த்தியது இன்று அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்துள்ள கட்சிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நன்றி என ரஜினிகாந்த் தெரிவித்தார். 
 

Read more Photos on
click me!

Recommended Stories