அன்பான மனைவி... சினிமாவில் ஹீரோவாக வலம்வரும் மகன்கள் - யாரும் பார்த்திராத நடிகர் மயில்சாமியின் பேமிலி போட்டோஸ்

First Published | Feb 19, 2023, 11:25 AM IST

தான் காமெடியனாக இருந்தாலும் தன் மகன்களை ஹீரோவாக்கி அழகுபார்த்த நடிகர் மயில்சாமியின் பேமிலி போட்டோஸை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மரணமடைந்த செய்து கோலிவுட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிகராக மட்டுமல்லாது சிறந்த சமூக சேவகராகவும் விளங்கி வந்த மயில்சாமி, இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். நடிகர் மயில்சாமிக்கு கீதா என்கிற மனைவியும், யுவன் மற்றும் அன்பு என்கிற மகனும் உள்ளனர். நடிகர் மயில்சாமி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இது.

மயில்சாமியின் மூத்த மகன் அன்பு, சினிமாவிலும் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இவர் நடித்த அல்டி என்கிற திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதன்பின் அவர் நடிப்பில் பெரிய அளவில் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

Tap to resize

மயில்சாமியின் இளைய மகன் பெயர் யுவன். இவரும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது தண்டகாரண்யம் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் யுவன். இப்படத்தை பா.இரஞ்சித் தயாரிக்கிறார். இப்படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார். அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் யுவன் மயில்சாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... Mayilsamy : மயில்சாமி மாதிரி ஒரு வள்ளலை பார்க்கவே முடியாது... கண்ணீர்மல்க இரங்கல் தெரிவித்த திரைப்பிரபலங்கள்

மயில்சாமி தனது மனைவி கீதா உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது. இந்த புகைப்படத்தை அவரின் மகன் யுவன் மயில்சாமி தான் எடுத்துள்ளார். இது மயில்சாமியின் திருமண நாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.

மயில்சாமி தனது மகன்கள் மீது அதீத அன்பு வைத்திருப்பவர். அந்த வகையில் தனது இளையமகன் யுவனுக்கு ஆளுயர மாலையை அணிவித்து அவருடன் அழகாக போஸ் கொடுத்த புகைப்படம் இது.

மயில்சாமியை பெரும்பாலும் வேட்டி சட்டையில் தான் பார்க்க முடியும். அவர் கோர்ட் சூட் போட்டு, மகனுக்கு இணையாக ஸ்டைலாக போஸ் கொடுத்த அழகிய புகைப்படம் இது.

மயில்சாமி சினிமாவில் நடிகராக இருந்தாலும், எளிமையான வாழ்க்கையை தான் அவர் வாழ்ந்து வந்துள்ளார். பெரும்பாலும் மக்களோடு மக்களாகவே இருக்க விரும்பும் மயில்சாமியின் எளிமைக்கு இந்த புகைப்படமே ஒரு சான்று.

இதையும் படியுங்கள்... Actor Mayilsamy : கண்கலங்க வைக்கும் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் கடைசி வீடியோ

Latest Videos

click me!