Sundari Season 2: சுந்தரி சீசன் 2 சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய ஹீரோ! யார் தெரியுமா? வெளியான தகவல்..!

First Published | Aug 25, 2023, 11:35 PM IST

சுந்தரி சீரியலின் இரண்டாவது சீசனில், ஹீரோவாக நடிக்கும், புதிய ஹீரோ யார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

சன் டிவி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும், சுந்தரி சீரியல் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் துவங்க உள்ளது. அந்த வகையில் அவ்வப்போது சுந்தரி சீரியலின் சீசன் 2 குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த தொடரில் யார் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்கிற தகவல் தான் தற்போது கசிந்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது சுந்தரி சீரியல்.  இந்த சீரியலை இயக்குனர் அழகர் இயக்கி வருகிறார். சாதிப்பதற்கு நிறம் ஒரு தடை இல்லை என்பதையும், வாழ்க்கையில் எத்தனை சோதனைகள் துரத்திக்கொண்டு வந்தாலும், நம்முடைய எண்ணம் முழுக்க ஒரே இலக்கை நோக்கி இருந்தால் வெற்றிபெற முடியும் என்கிற கருத்தை மையமாக வைத்து தான் 'சுந்தரி' சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

Biggboss 7: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் எதிர்பாராத ட்விஸ்ட்! புதிய புரோமோவில் சஸ்பென்ஸை உடைத்த கமல்ஹாசன்!

Tap to resize

இந்த சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில், அதாவது கதாநாயகியாக கேப்ரியல்லா செலஸ் நடிக்க,  ஜிஷ்ணு மேனன் ஹீரோவாக நடித்திருந்தார். இரண்டாவது கதாநாயகியாக ஸ்ரீகோபிகா நீலநாத் நடித்துள்ளார். சுமார் 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், ஒருவழியாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அனுவுக்கு குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டது மட்டும் இன்றி, கார்த்திக் பற்றிய உண்மையும் அனுவுக்கு தெரிந்து விட்டது. 

அதே போல் சுந்தரியும், தான் ஆசை பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவியை ஏற்க உள்ளார். இந்த வாரத்துடன் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என கூறப்படும் நிலையில், இந்த தொடரின் இரண்டாம் பாகத்தின் பணிகள் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்திலும் கேப்ரியல்லா நாயகியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகர் கிருஷ்ணா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

2023 உலக கோப்பையை அறிமுகம் செய்த முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்ற மீனா! குவியும் வாழ்த்து!

இவர் சன் டிவி-யில் ஒளிபரப்பான 'தெய்வத்திருமகள்', 'தாலாட்டு' போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தொடர்ந்து தரமான சீரியல்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் கிஷ்ணா இந்த சீரியலில் நடிக்க உள்ளதால், சுந்தரி சீசன் 2 தொடரும் கண்டிப்பாக வித்தியாசமான கதைக்களம் கொண்ட தொடராக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சீசன் 2 குறித்த அறிவிப்பு வெளியாகும் வரை கார்த்திருப்போம்.

Latest Videos

click me!