கார்த்தி மகன் கந்தனா இது? மளமளவென வளர்ந்துட்டாரே; திருப்பதி கோவிலில் எடுத்த போட்டோஸ் இதோ

Published : Feb 11, 2025, 03:02 PM IST

நடிகர் கார்த்தி தன்னுடைய மகன் கந்தன் மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தபோது எடுத்த போட்டோஸ் வைரலாகிறது.

PREV
14
கார்த்தி மகன் கந்தனா இது? மளமளவென வளர்ந்துட்டாரே; திருப்பதி கோவிலில் எடுத்த போட்டோஸ் இதோ
கார்த்தி மகன் கந்தன்

நடிகர் சிவகுமாரின் மகன் கார்த்தி, மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்னர் பருத்திவீரன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனராகும் முடிவை மூட்டைகட்டி வைத்துவிட்டு, முழுநேர நடிகராகிவிட்டார். பருத்திவீரன் வெற்றிக்கு பின்னர் பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார்.

24
திருப்பதிக்கு வந்த கார்த்தி

நடிகர் கார்த்திக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த 2013-ம் ஆண்டு உமையால் என்கிற பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து ஒரு ஆண் குழந்தைக்கு அப்பா ஆனார் கார்த்தி. அந்த குழந்தைக்கு கந்தன் என கடவுளின் பெயரை சூட்டி இருந்தார் கார்த்தி. நடிகர் சூர்யா கூட தன் பிள்ளைகளுடன் அடிக்கடி வெளியே செல்லும் போது புகைப்படங்கள் வெளியாகும். ஆனால் கார்த்தியின் குழந்தைகளின் புகைப்படங்கள் பெரியளவில் வெளிவந்ததில்லை.

இதையும் படியுங்கள்... ஹீரோயின் உடன் உருவாகும் கைதி 2! கார்த்திக்கு ஜோடி இவரா?

34
மகன் கந்தனுடன் சாமி தரிசனம்

அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளாக கார்த்தி பொத்தி பொத்தி வளர்த்த அவரது செல்ல மகன் கந்தனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி தைப்பூச தினமான இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தனது தாய் மற்றும் மகன் கந்தன் உடன் வருகை தந்திருந்தார் கார்த்தி. விஐபி தரிசனத்தின் போது மகனை கையில் தூக்கிக் கொண்டு நடந்து வந்தார் கார்த்தி. வேட்டி, சட்டையில் ஜம்முனு வந்திருந்தார் கார்த்தியின் மகன் கந்தன்.

44
கார்த்தி பேமிலி

குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த நடிகர் கார்த்தியுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது வா வாத்தியாரா திரைப்படம் தயாராகி உள்ளது. அப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். அப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர அவர் கைவசம் உள்ள மற்றொரு படம் சர்தார் 2. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி இருக்கிறார். இப்படமும் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.

இதையும் படியுங்கள்... வைகை புயலுக்கு அடித்த ஜாக்பார்ட்; 'பொன்னியின் செல்வன்' நடிகர் படத்தில் இணைந்தார் வடிவேலு!

Read more Photos on
click me!

Recommended Stories