நடிகர் பரத்தின் ட்வின்ஸ் மகன்களின் 5-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்..! வைரலாகும் போட்டோஸ்..!

First Published | Aug 9, 2023, 9:06 PM IST

நடிகர் பரத்தின் ட்வின்ஸ் மகன்களான ஆதியன் மற்றும் ஜெய்தன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு சித்தார்த் மற்றும் ஜெனிலியா நடித்த, 'பாய்ஸ்' படத்தின் மூலம் சித்தார்த்தின் நண்பர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பரத். இந்த படத்தில் பரத்தின் கதாபாத்திரம் ஒரு குணசித்திர கதாபாத்திரமாகவே பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்தை தொடர்ந்து 'செல்லமே' படத்தில் குழந்தைத்தனமாக இருந்து கொண்டு மிரட்டல் வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் கேரக்டரில் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார் பரத்.

பரத்தை ஹீரோவாக அறிமுகப்படுத்திய பெருமை, இயக்குனர் பாலாஜி சக்திவேலை தான் சேரும். இவர் இயக்கிய காதல் படத்தின் மூலம் பரத் ஒரு எதார்த்தமான ஹீரோவாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி, முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தலைவிக்கு செம்ம தில்லு.. திருப்பதிக்கு மொட்டை போட்டு... நாமத்தோடு புகைப்படம் வெளியிட்ட காயத்திரி ரகுராம்!
 

Tap to resize

இதைத்தொடர்ந்து பிப்ரவரி 14, பட்டியல், எம்டன் மகன், சென்னை காதல், வெயில், பழனி, நேபாளி, போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளத்தில் நடிப்பதை தவிர்த்து விட்டு  வித்யாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் கவனம் செலுத்தி வரும் பரத், கடைசியாக தமிழில் நடித்த சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

ஆனால் கடந்த ஆண்டு வாணி போஜனுக்கு ஜோடியாக நடித்திருந்த 'மிரள்' திரைப்படம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் லவ் என்கிற படத்தின் மூலம் வாணி போஜன் உடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்தார் பரத். இந்த படம் பரத்தின் 50 ஆவது படமாக கடந்த மாதம் வெளியானது.

பாக்கியாவை மிரட்டி பார்க்கும் இனியா! ஈஸ்வரியிடம் ஏற்பட்ட மாற்றம்? 'பாக்கியலட்சுமி' சீரியலில் செம்ம ட்விஸ்ட்!

மலையாளத்தில் ரொமான்டிக் - திரில்லர் கதையம்சத்துடன் வெளியான 'லவ்' என்கிற படத்தின் ரீமிக்காக எடுக்கப்பட்ட இந்தப் படம், அதே பெயரில் வெளியான நிலையில், மலையாளத்தில் பெற்ற அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. தற்போது இவரின் கைவசம், தமிழில் முன்னறிவான் என்ற படத்திலும் மலையாளத்தில் சமரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகர் பரத் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜெஸ்லி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஆதியன், ஜெய்தன் என்கிற இரட்டை மகன்கள் உள்ளனர். இவர்களின் ஐந்தாவது பிறந்த நாளை தற்போது பரத் மிகவும் எளிமையாக கொண்டாடிய நிலையில், இது குறித்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு தன்னுடைய செல்ல மகன்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

Biggboss Season 7: 'பிக்பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கயல் சீரியல் நடிகை! யார் தெரியுமா..?

Latest Videos

click me!