பிரபல நடன இயக்குனர் ரகுராமின் மகளான காயத்திரி, தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து தமிழில் நடிகர் பிரபு தேவாவுக்கு ஜோடியாக.. 'சார்லி சாப்ளின்' படத்தில் நடித்தார் முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்தடுத்து, ஸ்டைல், பரசுராம், விசில், விகடன, வானம் போன்ற பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
gayatri rahuram
விவாகரத்துக்கு பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே காயத்திற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், ஜெயம் கொண்டான் படத்தின் மூலம் நடன இயக்குனராக அவதாரம் எடுத்தார். இதை தொடர்ந்து,கந்தசாமி, மதராசபட்டினம், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். சமீபத்தில் வெளியான தலைவி படத்திலும் இவர் நடன இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பாஜகவில் இருந்து தான் விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்தது மட்டும் இன்றி, திடீர் என விசிக கட்சி தலைவர் தொல் திருமாவளவனை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவ்வப்போது சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில், சமூக வலைத்தளத்தில் சில பதிவுகளை போட்டு வரும் இவர், திருப்பத்திற்கு சென்று மொட்டை அடித்து கொண்டு, நெற்றியில் நாமத்தோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.