Shihan Hussaini Last Wish : அரியவகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகரும், புகழ்பெற்ற கராத்தே வீரருமான ஷிஹான் ஹுசைனி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தான் இறக்கும் முன்னர் கடைசியாக அளித்த பேட்டியில் தன்னுடைய கடைசி ஆசை என்ன என்பதை ஹுசைனி கூறி இருக்கிறார்.
24
Shihan Hussaini
அவர் சென்னையில் கராத்தே மற்றும் வில் வித்தை பயிற்சிக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். அதேபோல் புத்தா மீது தீராத அன்பு கொண்டுள்ள அவர் புத்தா சேம்பர் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். தான் இறந்த பின்னர் தன்னுடைய உடலை மூன்று நாட்கள் அந்த புத்தா சேம்பரில் வைத்திருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் அவருடைய தாயின் முடியை வெட்டி அங்கே பாதுகாத்து வருகிறார். அதேபோல் தன்னுடைய முட்டி எலும்பை தனியாக அங்கு வைத்திருக்கிறார் ஹுசைனி.
புத்தர் சிலை செய்வதற்காக தன்னுடைய எலும்பை எடுத்து வைத்திருந்தாராம் ஹுசைனி. ஆனால் அதற்குள் கேன்சர் பாதிப்பு வந்ததால் அவரால் அது செய்ய முடியாமல் போனது. புத்தா சேம்பரில் மூன்று நாட்கள் தன்னுடைய உடலை வைத்திருந்த பின்னர் தான் அதை மதுரைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என கூறியுள்ள ஹுசைனி. தன்னுடைய உருவச் சிலையையும் மதுரையில் நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு தான் இறந்துள்ளார்.
44
Shihan Hussaini Passed Away
ஹுசைனிக்கு உலக சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற ஆசையும் இருந்ததாம். இந்த ஆண்டு அந்த உலக சுற்றுலாவுக்கு தயாராகி வந்தபோது தான் அவருக்கு அரியவகை கேன்சர் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மார்ச் மாத தொடக்கத்தில் தான் அவருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. அவர் இன்னும் சில நாட்களில் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் சொன்ன நிலையில், அவர்கள் சொன்னபடியே இன்று உயிரிழந்தார் ஹுசைனி.