இலங்கையில் இருந்து கஸ்டம் ஆபீசர்சை ஏமாற்றி ரம்பா இந்தியாவுக்கு எடுத்து வந்தது என்ன? சிக்க வைத்த பேட்டி!
நடிகை ரம்பா தற்போது சென்னை வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ள நிலையில், இவர் அண்மையில் தன்னுடைய அரண்மனை போன்ற வீட்டில் இருந்து கொடுத்த பேட்டியில்
நடிகை ரம்பா தற்போது சென்னை வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ள நிலையில், இவர் அண்மையில் தன்னுடைய அரண்மனை போன்ற வீட்டில் இருந்து கொடுத்த பேட்டியில்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா என்று ஏராளமான படங்களில் நடித்தார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டி செட்டிலானார். குழந்தையும் பெற்றுக் கொண்டார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரியாலிட்டி ஷோ மூலமாக கம்பேக் கொடுத்துள்ளார்.
அதோடு சினிமாவிலும் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். கதை கேட்கவும் தொடங்கியிருக்கிறாராம். இந்த நிலையில் தான் சென்னையில் உள்ள ஆடம்பரமான தன்னுடைய வீடு பற்றிய பல தகவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
3 குழந்தைக்கு தாயான பின்னர் 48 வயதில் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா!
இலங்கையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆன ரம்பா எப்போது லீவு கிடைக்கிறதோ அப்போது தான் சென்னைக்கு வந்து தாங்குவாராம். இப்போது தனியார் டிவி சேனலில் நடந்து வரும், டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக கலந்து கொள்ளவும் மூவி சான்ஸிற்காக சென்னைக்கு வந்துள்ளதாக கூறியிருக்கிறார்.
தன்னுடைய வீட்டில் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளாராம். ரம்பாவின் வீடு அருகே கமல்ஹாசன் ஒரு வீட்டை கட்டி வருவதாகவும், தன்னுடைய வீட்டின் அருகே தான் சினேகா, பிரபு தேவா ஆகியோரின் வீடு உள்ளது என்றும் கூறி உள்ளார். செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் உள்ள ரம்பா வீட்டை சுற்றிலும் பல செடிகளை வளர்த்துள்ளார்.
அந்த ஒரு நடிகைக்காக கணவரை பாலோ பண்ணாத ரம்பா – ஓபனாக பேசிய வீடியோ வைரல்!
கறிவேப்பிலை செடி, செம்பருத்தி, மருதாணி செடி, துளசி போன்ற செடிகள் நான் நட்டு வைத்தது. என கூறியுள்ளார். அதே போல், விமானங்களில் வெளிநாட்டில் இருந்து செடிகள் எடுத்து வர அனுமதி இல்லை. ஆனால் ரம்பா இலங்கையிலிருந்து, மருதாணி செடியை கொண்டு வந்ததாக கூறியுள்ளார்.
அதாவது ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதில் மருதாணி செடியின் வேரை சிறியதாக வெட்டி எடுத்து போட்டு கொண்டு வந்ததாக கூறியுள்ளார். அந்த மருதாணி இப்போது மரமாக வளர்ந்து நிற்கிறது. இப்போது ரம்பா பேசியுள்ள இந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமன்னாவால்... ரம்பா குடும்ப வாழ்க்கையில் வந்த பிரச்சனை! கணவர் செய்ததை வெளியே சொன்ன நடிகை!