பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வந்த் மாரிமுத்து காம்போவில் முதல் முறையாக வெளியான 'டிராகன்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தளபதி விஜய் படக்குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில், வெளியான திரைப்படம் 'டிராகன்' இளவட்ட ரசிகர்களை கவரும் கதைக்களத்தில் காதல், மோதல், காமெடி, செண்டிமெண்ட் போன்ற அம்சங்களுடன் ஒரு மெசஜையும் இந்த படத்தின் மூலம் பதிவு செய்திருந்தார் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து. 'ஓ மை கடவுளே' திரைப்படத்திற்கு பின்னர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கிய இந்த திரைப்படம், வசூல் ரீதியாகவும் ரூ.150 கோடிக்கு மேல் கலெக்ட் செய்தது.
26
150 கோடிக்கு மேல் வசூல் செய்த டிராகன் திரைப்படம்
அஜித் நடிப்பில் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் வெளியான 'விடாமுயற்சி' திரைப்படம் ரூ.135 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த சாதனையை வெறும்... ரூ.35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'டிராகன்' திரைப்படம் முறியடித்து விட்டதாக திரைப்பட விமர்சங்கள் கூறினர். இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பிரதீப் ரங்கநாதனின் எதார்த்தமான நடிப்பு.
நடிகர் தனுஷ் போலவே பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாக சில விமர்சனங்கள் வந்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாத பிரதீப் ரங்கநாதன், நான் என்னைப் போலவே நடிக்கிறேன் என சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். தோற்றத்தில் பார்ப்பதற்கு தனுஷ் போலவே ஒல்லியாக இருப்பதால் ஒருவேளை ரசிகர்களுக்கு நான் தனுஷ் போல் இருப்பதாக தோன்றியிருக்கலாம் என்றார். ஏற்கனவே இவர் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான 'லவ் டுடே' திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இவர் ஹீரோவாக நடித்த இரண்டாவது திரைப்படமும் ரூ.100 கோடி வசூலை பெற்றது.
46
பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் திரைப்படங்கள்
இதை தொடர்ந்து தன்னுடைய மூன்றாவது படத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் LIK படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த ஆண்டு இப்படம் வெளியாக உள்ளது. நயன்தாராவின் ரவுடி பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அதே போல் இன்னும் சில படங்களிலும் பிரதீப் ரங்கநாதன் கமிட் ஆகி உள்ளார்.
மேலும் பிரதீப் நடித்த 'டிராகன்' திரைப்படம் வெளியானதில் இருந்தே, பல பிரபலங்கள் பட குழுவினரை மனதார வாழ்த்தி பதிவு போட்டு வந்த நிலையில், சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட குழுவினரை வீட்டுக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து தளபதி விஜய், தற்போது 'டிராகன்' பட குழுவினரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அஸ்வந்த் மாரிமுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
66
அஸ்வந்த் மாரிமுத்து போட்ட பதிவு
இந்த புகைப்படங்களோடு அஸ்வந்த் மாரிமுத்து போட்டுள்ள பதிவில், "என் மக்களுக்கு தெரியும், நான் அவரை ஒரு நாள் முழு தகுதியுடன் சந்தித்து, அவருடன் இணைந்து பணியாற்ற கடுமையாக உழைத்து வருகிறேன் என்று! நான் அவரைச் சந்தித்தேன்!! நான் அவருக்கு நேர் எதிரே அமர்ந்தேன்! வழக்கமாக நான் அதிகமாகப் பேசுவேன், என் குழுவினருக்கு நான் எவ்வளவு பெரிய விஜய் ரசிகன் என்பது தெரியும் என்பதால் நான் பேசுவதற்காகக் காத்திருந்தார்கள்! அவர் அப்படித்தான் இருந்தார்! என தெரிவித்துள்ளார்.