Jana Nayagan Release Date Confirmation : தளபதி விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அஜித்தின் மாஸ் இயக்குநரான எச் வினோத் இயக்கி வருகிறார். பீஸ்ட் படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது காட்சிகள் முற்றிலுமாக முடிக்கப்பட்டுள்ளது.
26
Thalapathy Vijays Jana Nayagan film update out
மேலும், பாபி தியோல், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரைன், ஷ்ருதி ஹாசன், மமிதா பைஜூ, மோனிஷா பிளெசி, வரலட்சுமி சரத்குமார், டீஜே அருணாச்சலம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்பட்டது.
36
Jana Nayagan Release Date Announced, Jana Nayagan Movie Release Date
இந்த நிலையில் தான் வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் 9ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஒன்று பொங்கல் அல்லது தீபாவளிக்கு தான் ரிலீஸ் ஆகும். அப்படிதான் அஜித்தின் விடாமுயற்சி பொங்கலுக்கு வருவதாக கூறப்பட்டு பின்னர் ஜகா வாங்கி கடைசியில் பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.
46
Jana Nayagan Release Date, Jana Nayagan Movie Update
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் இனிமேல் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டார். கடைசி படத்தில் மட்டும் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
56
Jana Nayagan Tamil Movie Release Date
தனது அரசியல் பயண பிரச்சாரத்திற்கு ஏற்ற வகையிலும் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் அவர் நடித்துள்ள ஜனநாயகன் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜனநாயகன் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் மறைமுகமாக தழிழக அரசியலை சாடுவது போன்ற உள்ள நிலையில் இப்போது ரிலீஸ் தேதியை மாற்றி வைத்து அதன் மூலமாக தனது அரசியல் கதையை மக்களிடையே கொண்டு செல்ல இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
66
Jana Nayagan Film Release Date, Jana Nayagan 2025 Release Date
இந்த நிலையில் தான் தயாரிப்பு நிறுவனம் புதிய ரிலீஸ் தேதியை விஜய்யின் போஸ்டர் உடன் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தான் தயாரிப்பு நிறுவனம் புதிய ரிலீஸ் தேதியை விஜய்யின் போஸ்டர் உடன் தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் திரைக்கு வருகிறது. இந்தப் போஸ்டரை பார்க்கும் போது ஏதோ பாடலுக்கான பாட்டாக தெரிகிறது.