Ajith : இமயமலை பைக் ட்ரிப்பின் போது நடிகர் அஜித் உடன் அதிமுக கவுன்சிலர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகின்றன.
பைக்கின் மீது அலாதி பிரியம் கொண்டவர் நடிகர் அஜித். ஏதேனும் ஓய்வு நேரம் கிடைத்தால் உடனே பைக்கை எடுத்துக் கொண்டு எங்காவது ட்ரிப் கிளம்பி விடுவார். நடிகர் அஜித்துக்கு பைக்கில் உலகையே சுற்றிவர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக உள்ளது. இதனை அவர் விரைவில் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் முன்னோட்டமாக தான் சமீபத்தில் ஐரோப்பா மற்றும் லண்டனுக்கு சென்று அங்கு தனது நண்பர்களுடன் பைக் ட்ரிப்பும் சென்றிருந்தார் அஜித்.
25
லண்டன் ட்ரிப்பை முடித்துக்கொண்டு கடந்த மாதம் இந்தியா திரும்பிய அஜித், தான் தற்போது நடித்து வரும் ஏ.கே.61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டார். விசாகப்பட்டினத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த ஷூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றது. இதில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரும்பாலும் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
35
ஏ.கே.61 படத்தின் விசாகப்பட்டினம் ஷெட்யூல் முடிந்ததும் லடாக் பறந்த நடிகர் அஜித், அங்கிருந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து பைக் ட்ரிப் சென்றுள்ளார். பைக்கிலேயே இமயமலையை சுற்றி வரும் அவரின் புகைப்படங்களும், வீடியோக்களும் தினந்தோறும் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தற்போது புதுத் தகவலாக நடிகர் அஜித்தின் இமயமலை பைக் ட்ரிப்பில் அவருடன் அதிமுக கவுன்சிலர் ஒருவரும் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. பொள்ளாச்சி நகராட்சியின் 8-வது வார்டு கவுன்சிலரான வசந்த் என்பவர் தான் தற்போது அஜித் உடன் பைக் ட்ரிப் சென்றுள்ளாராம். இவர் அஜித்தின் நெருங்கிய நண்பர் என்றும், அவரைப் போல் பைக் ரைடிங் மீது ஆர்வம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.
55
இமயமலை பைக் ட்ரிப்பின் போது நடிகர் அஜித் உடன் அதிமுக கவுன்சிலர் வசந்த் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மொத்தம் 4 நாட்கள் அஜித் இந்த பைக் ட்ரிப் சென்றுள்ளதாகவும். இதனை முடித்ததும் சென்னை திரும்ப உள்ள அஜித், அடுத்த சில தினங்களில் ஏ.கே.61 படத்தின் டப்பிங் பணிகளை தொடங்குவார் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.