ஆளவந்தான் முதல் அசுரன் வரை - திரைப்படமாக உருவாக்கப்பட்ட ஹிட் நாவல்கள்!

First Published | Aug 30, 2024, 7:16 PM IST

Novels Turned into Movies : நாவல்களாக வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற புத்தகங்கள், பிற்காலத்தில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு ஹிட்டாகியுள்ளது.

Thillana Mohanambal

கடந்த 1968ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டிய பேரொளி பத்மினி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் தான் "தில்லானா மோகனாம்பாள்". இந்த திரைப்படம் கே. பி நாகராஜன் இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படம் என்றாலும், கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் "தில்லானா மோகனாம்பாள்" என்கின்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

துள்ளல் இசை.. 2K கிட்ஸ்க்கு செம ட்ரீட் வைத்த தனுஷ் - வெளியானது NEEK படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

Aalavandhan

உலக நாயகன் கமல்ஹாசன் இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்து தொழில்நுட்ப ரீதியாகவும், திரைக்கதை ரீதியாகவும் பல சவால்களை சந்தித்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் "ஆளவந்தான்". சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பே அப்படத்தில் "பேஸ் மாஸ்கிங்" டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் உலக நாயகன் கமல்ஹாசன் எழுதிய "தாயம்" என்கின்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு தான் இப்படம் உருவாக்கப்பட்டது.

Tap to resize

Aravaan Movie

கடந்த 2012ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் ஆதி மற்றும் தன்ஷிகா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "அரவான்". முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தை கொண்டு தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்ட வெகு சில படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் கடந்த 2008ம் ஆண்டு சு வெங்கடேசன் எழுதிய "காவல் கூட்டம்" என்கின்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது.

Asuran Movie

கடந்த 2019ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி, தேசிய விருது வென்ற திரைப்படமாக மாறியது தனுஷின் "அசுரன்" திரைப்படம். நடிகர் தனுஷின் திரை வாழ்க்கையில் மிக மிக முக்கியமான ஒரு படமாக மாறிய "அசுரன்", பூமணி என்பவர் எழுதிய "வெக்கை" என்கின்ற புத்தகத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டின் "ஹிட்டென் ஜெம்".. இளையராஜா சவாலை ஏற்று சாதித்த ஒரே இயக்குனர் - யாருப்பா அவரு?

Latest Videos

click me!