தமிழ்நாட்டில் ‘இந்த’ ஊர மையமா வச்சு படம் எடுத்தாலே கன்பார்ம் ஹிட்டு தான்!

Published : Mar 05, 2025, 11:41 AM IST

தமிழ் சினிமாவில் பல்வேறு ஊர்களை மையமாக வைத்து படங்கள் வந்தாலும், குறிப்பிட்ட ஒரு ஊரை வைத்து எடுக்கப்படும் படங்கள் அதிகளவில் ஹிட்டாகி உள்ளன.

PREV
16
தமிழ்நாட்டில் ‘இந்த’ ஊர மையமா வச்சு படம் எடுத்தாலே கன்பார்ம் ஹிட்டு தான்!

Madurai based tamil movies list: மதுரை மாவட்டத்தின் பாரம்பரியமும், அதன் வட்டாரமொழியும் வித்தியாசமாக இருப்பதனால் அம்மாநகரை மையமாக கொண்டு வெளிவரும் படங்களுக்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. 

“இந்த மண்ணு மணக்குற மல்லிகைப்பூ நம் மனச எடுத்து சொல்லும்” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பாசக்கார மக்கள் வாழும் ஊர் தான் மதுரை. அங்குள்ள வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. அந்த படங்களில் பெரும்பாலானவை ஹிட்டடித்து உள்ளன. அப்படி மதுரை கதைக்களத்தில் உருவான படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

26
கில்லி

நடிகர் விஜய்யின் கெரியரில் மறக்க முடியாத படம் என்றால் அது கில்லி தான். கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை தரணி இயக்கி இருந்தார். மதுரையில் உள்ள உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் அருகே விஜய்யை வைத்து அதிரடி சண்டைக்காட்சியை எடுத்திருப்பார்கள். இப்படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ், மதுரை முத்துப்பாண்டி கோட்டை என பேசும் டயலாக்குகளுக்கு விசில் பறந்தன. ரிலீசின் போதே வசூல் சாதனை செய்த கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆகியும் பட்டைய கிளப்பியது.

36
சுப்ரமணியபுரம்

துரோகத்திற்கு மரணம் தான் தண்டனை என்பதை கருவாக கொண்டு சசிக்குமார் இயக்கிய படம் சுப்ரமணியபுரம். பக்கா மதுரை படம் என்றே இதை சொல்லலாம். முழுக்க முழுக்க மதுரையில் எடுக்கப்பட்டு அங்குள்ள மக்களின் வட்டார வழக்கில் ஒவ்வொருவரும் பேசும் வசனங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தை பார்த்தால் மதுரைக்கே சென்று வந்த ஒரு ஃபீல் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்... இது வீடா.. இல்ல மாடர்ன் அரண்மனையா! மதுரையில் மாஸாக நடிகர் சசிகுமார் கட்டியுள்ள பிரம்மாண்ட வீடு

46
ஆடுகளம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த படம் ஆடுகளம். இது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடக்கும் சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் பக்கா மதுரக்காரராகவே வாழ்ந்திருந்தார் தனுஷ். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு, நடிகர் தனுஷுக்கு முதல் தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. தமிழ் சினிமாவின் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக ஆடுகளம் கொண்டாடப்படுகிறது.

56
பருத்திவீரன்

நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான படம் பருத்திவீரன். இப்படத்தை அமீர் இயக்கி இருந்தார். இது மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர். இப்படத்தில் லுங்கி கட்டி மதுரையை சேர்ந்த இளைஞனாகவே மாறி இருந்தார் கார்த்தி. இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்தன. இதுவும் மதுரை தந்த ஒரு மாஸ்டர் பீஸ் படம் தான்.

66
காதல்

மதுரையில் மெக்கானிக்காக வேலை செய்யும் இளைஞனுக்கும் பள்ளி மாணவிக்கும் இடையே மலரும் அழகிய பருவக் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் காதல். இப்படத்தில் பரத், சந்தியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கி இருந்தார். மதுரை ஜிகர்தண்டாவை பேமஸ் ஆக்கியதும் இந்தப் படம் தான்.

இதையும் படியுங்கள்... 'காதல்' பரத்துக்கு இந்த நிலையா? இயக்குனரின் வாரிசுக்கு வில்லனாகிறார்!

click me!

Recommended Stories