Nilavuku en mel ennadi kobam OTT Release : தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் தியேட்டரில் சொதப்பிய நிலையில், அப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
பா.பாண்டி, ராயன் படங்களை இயக்கிய தனுஷின் 3வது படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (நீக்). இப்படத்தில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி இருந்தார் பவிஷ். இப்படத்தில் ஹீரோயினாக குட்டி நயன் அனிகா சுரேந்திரன் நடித்திருந்தார். மேலும் பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.