Tamannaah - Vijay Varma Break Up : பாலிவுட்டில் நட்சத்திர காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் தமன்னா மற்றும் விஜய் வர்மா. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடி திடீரென காதலை முறித்துக் கொண்டுள்ள தகவல் பாலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதனால் ரசிகர்களும் பேரதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
24
Vijay Varma, Tamannaah
2023ம் ஆண்டு தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் சேர்ந்து நடித்த ‘லஸ்ட் ஸ்டோரீஸ்-2’ வெப் தொடர் ரிலீஸ் ஆன பின்னர் தான் அவர்களின் லவ் மேட்டர் வெளிய லீக் ஆனது. சில வருடங்களால டேட்டிங் செய்து வந்த இந்த ஜோடி அவர்களின் ரிலேஷன்ஷிப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்து கடந்த ஆண்டே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்திருந்தார்களாம். ஆனா, பிங்க் வில்லா ரிப்போர்ட் படி, தமன்னா மற்றும் விஜய் வர்மா ஜோடி சில வாரங்களுக்கு முன் தங்கள் ரிலேஷன்ஷிப்பை முடித்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமன்னா மற்றும் விஜய் வர்மா ஜோடி ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் பிரேக் அப் பண்ணிக்கிட்டாங்களாம். பிரிந்தாலும் நல்ல ஃபிரண்ட்ஸா இருக்க இருவரும் முடிவு பண்ணிருக்காங்களாம். இந்த ஜோடியோட காதல் பயணம் முடிஞ்சாலும், ஒருத்தருக்கொருத்தர் மரியாதை இருக்குமாம்'னு ரிப்போர்ட் சொல்லுது. ஆனா, கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கன்னு எதிர்பார்த்துட்டு இருந்த ஃபேன்ஸுக்கு இந்த தகவல் ஷாக்கிங்கா இருக்கு. ஆனா, இத பத்தி தமன்னாவும், விஜய் வர்மாவும் இன்னும் வாய் திறக்காமல் உள்ளார்கள்.
44
Tamannaah Breaks Relationship With Vijay Varma
தமன்னா மற்றும் விஜய் வர்மாவின் ரிலேஷன்ஷிப் அவங்க ஃபர்ஸ்ட் டைம் ஜோடியாக நடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடர் ரிலீஸ் ஆனப்போ தான் வெளியே தெரிஞ்சது. அதன் ப்ரோமோஷன்ல இந்த ஜோடி கைய கோத்துக்கிட்டு நிறைய பப்ளிக் ஈவென்ட்ஸ்ல கலந்துக்கிட்டாங்க. அங்க இருந்து ஓப்பனா கைய பிடிச்சு சுத்துன இந்த ஜோடி அவங்க ரிலேஷன்ஷிப்ப ஓப்பனா சொல்லிட்டாங்க. வருஷக்கணக்காக டேட்டிங் பண்ணிட்டு இப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கன்னு எதிர்பார்த்தப்போ பிரிஞ்சுட்டாங்கன்னு சொல்றாங்க.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.