
Lady Superstar Nayanthara : சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் உச்சம் தொடுவது அரிதான காரியம். நடிகைகள் சாவித்ரி, ஸ்ரீதேவி போன்ற ஒருசில ஜாம்பவான்கள் மட்டுமே சாதித்துகாட்டியதை சமகாலத்தில் சாத்தியப்படுத்தி காட்டியவர் நயன்தாரா.
டயானா குரியனாக திரை வாழ்க்கையை தொடங்கிய நயன்தாரா, ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். மாடலிங் ஆசையில் சில விளம்பரங்களிலும் நடித்துள்ள நயன்தாரா, 2003-ம் ஆண்டு தன்னுடைய தாய் மொழியான மலையாளத்தில் மனசினக்கரே என்கிற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்கு கிடைத்தது.
இதையடுத்து நயன்தாராவின் நடிப்பை பார்த்து இம்பிரஸ் ஆன இயக்குனர் பி வாசு, அவரை ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடிக்க வைத்தார். நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற நயன்தாரா, அடுத்தடுத்து கஜினி, யாரடி நீ மோகினி, பில்லா என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.
இதையும் படியுங்கள்... அஜித், கமல் வழியில் நயன்தாரா; லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்: நயன்தாரா வேண்டுகோள்!
வல்லவன் படத்தில் சிம்புவுடன் நடித்தபோது காதல் கிசுகிசுவில் சிக்கிய நயன்தாரா, பின்னர் பில்லா படத்தில் பிகினி உடையில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து பிரபுதேவா உடன் காதல் வயப்பட்ட நயன்தாரா, தெலுங்கில் உருவான ஸ்ரீ ராமஜெயம் படத்தோடு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின்னர் இந்து மதத்திற்கு மாறிய நயன்தாரா, பின்னர் பிரபுதேவா உடன் ஏற்பட்ட காதல் முறிவால் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்தார்.
மூன்று ஆண்டு இடைவெளிக்கு பின் நயன்தாரா நடித்து வெளிவந்த ராஜா ராணி, ஆரம்பம் ஆகிய படங்கள் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததால் படிப்படியாக லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். பின்னர் 2015-ம் ஆண்டு ஒரு மாத இடைவெளியில் மாயா, நானும் ரெளடி தான் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்ததால் அவரை சினிமா வட்டாரத்திலும் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்க தொடங்கினர். இந்த லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை பிரபலமாக்கியதில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனுக்கும் முக்கிய பங்கு உண்டு.
பின்னர் அறம் படத்தின் மூலம் டாப் ஹீரோக்களுக்கு நிகராக வசூல் சாதனை செய்து லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு தான் தகுதி ஆனவர் என நிரூபித்தார் நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டாலும் அந்த டேக் லைனை படங்களில் பயன்படுத்தாமல் இருந்து வந்த நிலையில், அவர் தயாரிப்பில் வெளிவரும் படங்களில் படிப்படியாக லேடி சூப்பர்ஸ்டார் என்று போடத் தொடங்கியதை அடுத்து அதே டேக் லைன் சினிமாவிலும் நயன்தாராவை தொற்றிக்கொண்டது.
ரசிகர்களும் அவரை லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்து வந்த நிலையில், தனக்கு அந்த பட்டம் வேண்டாம் என பல பேட்டிகளில் கூறி வந்த நயன்தாரா, தற்போது தான் அந்த பட்டத்தை துறப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இனி தன்னை யாரும் அப்படி கூப்பிட வேண்டாம் என்றும் தனக்கு தன்னுடைய பெயர் தான் அடையாளம் என்பதால், நயன்தாரா என்றே அழைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... 50 நொடிகளில் 5 கோடி சம்பாதிக்கும் இந்த தமிழ் நடிகை யார் தெரியுமா?