சூப்பர் ஸ்டார் ஆசியுடன்... சினிமாவில் கால்பதிக்கும் ஜெர்மனி வம்சாவெளியை சேர்ந்த தமிழன்!

Published : Sep 24, 2025, 05:58 PM ISTUpdated : Sep 24, 2025, 08:40 PM IST

A Tamil of German origin stepping into Kollywood with rajinikanth blessings : ஜெர்மனியில் குடியேறிய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, பிரசாத் லோகேஸ்வரன், தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர் ஸ்டார் ஆசியுடன்  ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார்.

PREV
14
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன்:

சினிமா மீதான ஈர்ப்பு காரணமாக, ஜெர்மனியில் நடிப்பு, சண்டை மற்றும் டப்பிங் உள்ளிட்டவைகளில் தொழில் முறை பயிற்சி பெற்ற பிரசாத், ஏராளமான நாடகங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும், அவரது கனவு எப்போதும் தமிழ் படங்களில் நடிப்பதுதான். “தன்னுடைய தந்தை எம்.ஜி. ராமச்சந்திரனின் தீவிர ரசிகர். அவர் என்னை எம்.ஜி.ஆரின் படங்களுக்கு அறிமுகப்படுத்தினார், இது தமிழ் சினிமா மீதான எனது காதலை தூண்டியது,” என்றும் தான் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் என்றும் பிரசாத் தெரிவித்துள்ளார்.

முக்கிய ஆதாரம் கொடுத்த ஜாய் கிரிசில்டா.. மாதம்பட்டிக்கு சுத்துப் போட்ட காவல்துறை.. வீட்டுக்கே பறந்த சம்மன்!

24
ரஜினிகாந்தின் ஆசி:

தற்போது "ரத்தமாரே" என்கிற படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக பிரசாத் அறிமுகமாகிறார். ரத்தமாரே குழுவினரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ஆசீர்வதித்துள்ளார். இதுகுறித்து பேசும் போது, “ரஜினி சாரை சந்தித்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது என்றும், அவரது ஆசீர்வாதங்கள் எனக்கு உலகத்திற்கு நிகரானது,” என்று நடிகர் பிரசாத் கூறினார். பிரசாத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ரத்தமாரே படத்தின் தலைப்பை "மக்கள் செல்வன்" விஜய் சேதுபதி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேவதி ஆபரேஷனில் ஏற்பட்ட சிக்கல்... கார்த்தி செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

34
பாரம்பரியத்துடன் மீண்டும் இணைய விருப்பம்:

பிராட் பிட்டின் நடிப்பு பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று வரும் பிரசாத், ஜெர்மன் மொழி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல வெளிநாட்டு வாழ் இந்தியர்களைப் போல் இல்லாமல், தனது பாரம்பரியத்துடன் மீண்டும் இணைய இந்தியாவில் குடியேற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

44
பிரகாசமான எதிர்காலம்:

'ரத்தமாரே' படப்பிடிப்பை முடித்து வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், பிரசாத் ஏற்கனவே பிற நம்பிக்கைக்குரிய திட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார், இது திரைப்படத் துறையில் அவருக்கு பிரகாசமான எதிர்காலத்தைக் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி ஊழியர்களுக்கு போக்கு காட்டிய ரவி மோகன் - ஒரேயடியாய் ஆப்பு வைத்த அதிகாரிகள்!

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories