தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணா மற்றும் அவருடைய தந்தை சுரேஷ் பாபு ஆகியோர், சட்ட சிக்கலில் தற்போது சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ராணா மற்றும் அவரின் தந்தை மீது, தொழிலதிபர் பிரமோத் குமார் என்பவர் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது, " கடந்த 2014 ஆம் ஆண்டு, தனக்கு சொந்தமான இடத்தில ஹோட்டல் அமைக்க போவதாக கூறி ராணா மற்றும் அவரின் தந்தை தன்னிடம் குத்தகைக்குஎடுத்தனர் .
ஆனால் ராணா மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் குத்தகைக்கு எடுத்த நிலத்தை திரும்ப ஒப்படைக்க முடியாது என பிரச்சனை செய்துள்ளனர். இதனால் பிரமோத் தன்னுடைய நிலத்தை விற்பனை செய்யமுடியாமல் போனது.
இந்த புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது.... வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் ராணா மற்றும் அவரின் தந்தை சுரேஷ் பாபு ஆகியோர் நேரில் ஆஜராகவேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.