பாபா படத்திற்கு மறுவெளியீட்டில் மாஸான வரவேற்பு கிடைத்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை அழைத்து அவர்களுடன் சக்சஸ் பார்ட்டி கொண்டாடி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் பாபா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
28
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த படத்தை ரஜினிகாந்த் தயாரித்து இருந்ததால், தோல்விக்கு அவரே பொறுப்பேற்று விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கிய சம்பவங்களும் அரங்கேறின.
38
பாபா படம் தோல்வியை தழுவினாலும், அப்படம் ரஜினியின் மனதுக்கு மிகவும் நெருக்கமான படமாகவே இருந்து வந்தது. இதன்காரணமாக அப்படத்தை எந்த ஓடிடி தளங்களுக்கும் கொடுக்காமல் பாதுகாத்து வைத்திருந்தார் ரஜினி.
48
இதனிடையே பாபா படத்தை மீண்டும் டிஜிட்டலில் மெருகேற்றி, அதில் சில வசனங்களையும் கிளைமாக்ஸையும் மாற்றி அமைத்து புதுப்பொலிவுடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்தநாளுக்கு மறுவெளியீடு செய்தனர்.
பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்யப்பட்ட இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக புதுப்படத்திற்கு காலை 4 மணிகாட்சி திரையிடப்படுவது போல் பாபா ரீ-ரிலீஸ் அன்றும் அதிகாலை 4 மணிகாட்சி திரையிடப்பட்டது.
68
ரீ-ரிலீஸில் ரசிகர்கள் மத்தியில் மாஸான வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் வாரிக்குவித்தது. இதுவரை ரீ-ரிலீஸான தமிழ் படங்களில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையை பாபா படைத்துள்ளது.
78
இந்நிலையில், பாபா படத்திற்கு மறுவெளியீட்டில் கிடைத்த மாஸான வரவேற்பின் காரணமாக அப்படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான ரஜினிகாந்த், படக்குழுவினரை அழைத்து அவர்களுடன் சக்சஸ் பார்ட்டி கொண்டாடி உள்ளார்.
88
காலா படத்தில் வருவது போல் கருப்பு நிற ஜிப்பா அணிந்து செம்ம மாஸான லுக்கில் ரஜினிகாந்த் படக்குழுவினருடன் கலந்துரையாடியபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதுமட்டுமின்றி படக்குழுவினருக்கு ராகவேந்திரரின் புகைப்படம் ஒன்றையும் பரிசாக வழங்கி உள்ளார் ரஜினி.