மலையாளத்தில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஜீத்து ஜோசப். இவர் தமிழில் முதன்முறையாக இயக்கிய படம் பாபநாசம். கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கவுதமி நடித்திருந்தார். இப்படத்தில் கமல்ஹாசனின் மகள்களாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் ஆகியோர் நடித்து இருந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு ரிலீசான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
24
இது மலையாளத்தில் மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தையும் ஜீத்து ஜோசப் தான் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பின் காரணமாக இதன் இரண்டாம் பாகமும் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அந்த படத்திற்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால் விரைவில் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகும் என்கிற அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகிவிட்டது.
திரிஷ்யம் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலுமே சக்கைப்போடு போட்டது. இந்நிலையில், திரிஷ்யம் படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. இதற்கான உரிமையை பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டுடியோஸ் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
44
இதுதவிர கொரியன் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் திரிஷ்யம் படத்தை ரீமேக் செய்ய அங்குள்ள நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகளும் வெளியாக வாய்ப்பு உள்ளது. கமல்ஹாசன் ரீமேக் செய்து நடித்த படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் ஆவது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.