ஸ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் யானை உடன் புகைப்படம் எடுத்த ரவீந்தர் சந்திரசேகர் - மகாலட்சுமி!

Published : Feb 12, 2023, 10:00 AM IST

கணவர் ரவீந்தர் சந்திரசேகரன் உடன் திருச்சி சென்ற மகாலட்சுமி ரங்கநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.  

PREV
18
ஸ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் யானை உடன் புகைப்படம் எடுத்த ரவீந்தர் சந்திரசேகர் - மகாலட்சுமி!
ரவீந்தர் சந்திரசேகரன்

இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் ரவீந்தர் சந்திரசேகரன். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரோடக்‌ஷன் நிறுவனத்தை தொடங்கி அதன் மூலமாக படங்களை தயாரித்து வந்துள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் சுட்ட கதை, நளனும் நந்தினியும், தொலைநோக்குப் பார்வை, கல்யாணம், முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

28
ரவீந்தர் சந்திரசேகரன் - மகாலட்சுமி

அதோடு மார்க்கண்டேயனும்  மகளிர் கல்லூரியும் என்னும் படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் யூடியூபில் பிக் பாஸ் குறித்து விமர்சனங்களையும் கொடுத்ததன் மூலம் தான் இவர் மிக பிரபலமானார். ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற ரவீந்திரன் சமீபத்தில் பிரபல தொகுப்பாளனியும், சின்னத்திரை நட்சத்திரமுமான மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.
 

38
மகாலட்சுமி - ரவீந்தர் சந்திரசேகரன்

முன்னதாக இவர்கள் இருவரும் ஒரு வருட காலமாக காதல் உறவிலிருந்ததாக கூறப்படுகிறது. மகாலட்சுமியும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வீடியோக்களும் சமூக வலைதளத்தை நிரப்பி வந்தன. இவர்களது திருமணம் திருப்பதியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று இருந்தது.  பெற்றோர்கள் சம்பந்தத்துடன் நடைபெற்று உள்ளது.
 

48
திருச்சி ஸ்ரீரங்கநாத சுவாமி கோயில்

திருமணத்திற்கு பிறகு ஏகபோக விமர்சனங்களை தொடர்ந்து பெற்று வந்தனர். இதனால் பிரபல யூட்யூப் சேனல்கள் அனைத்திற்கும் பேட்டி அளித்து வந்தனர் ரவீந்திரனும் மகாலட்சுமியும். ஒரு கட்டத்தில் தாங்கள் இனிமேல் பேட்டி அளிக்கப் போவதில்லை. எங்களது வாழ்க்கை கவனிக்க போகிறோம்.
 

58
ஸ்ரீரங்கம் கோயில்

உடல்ரீதியான விமர்சனங்களை இனிமேல் யாரைப் பற்றியும் கூறாதீர்கள். அது மிகவும் வருந்துத்தக்கது. என மகாலட்சுமியும் ரவீந்திரனும் சேர்ந்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தனர். அதோடு ஹனிமூன் சென்ற இவர்கள் அவ்வப்போது தங்களது புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர். 
 

68
கோயில் யானையுடன் மகாலட்சுமி ரவீந்தர் சந்திரசேகரன்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா நாடகத்தில் மகாலட்சுமி நடித்து வருகிறார். இந்த நிலையில், மகாலட்சுமி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் ரவீந்தரன் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

78
மகாலட்சுமி

அதில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அங்குள்ள யானை உடன் இருவரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதில், வித் மை மேன் ரவீந்தர் சந்திரசேகரன் என்று பதிவிட்டுள்ளார்.
 

88
ரவீந்தர் சந்திரசேகரன்

இதைப் பார்த்த பலரும் எங்களை மட்டும் உள்ளே போட்டோ எடுக்கவிட மாட்றாங்க, உங்கள் சேலை அழகாக இருக்கிறது எந்த கடையில் வாங்குனீர்கள், கும்பகோணத்திற்கு ஒரு முறை வாங்க அக்கா, நல்ல ஜோடி என்றெல்லாம், ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories