முன்னதாக கடந்த ஆண்டு நடிகை மாளவிகா மோகனன் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை நயன்தாராவின் பெயரைக் குறிப்பிடாமல், அவர் படம் ஒன்றில் ஹாஸ்பிட்டல் சீன் ஒன்றில் மேக்கப் போட்டு நடித்ததை குறிப்பிட்டு, சாகும் நிலையில் இருக்கும்போது கூட இப்படி தான் இருப்பீர்களா என பேசி இருந்தார். இதற்கு கனெக்ட் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது நயன்தாராவும் பதிலடி கொடுத்தார். அது கமர்ஷியல் படம், அதில் தலையை விரித்து போட்டெல்லாம் நடிக்க முடியாது. இயக்குனரின் விருப்பத்திற்கு ஏற்ப தான் என்னால் நடிக்க முடியும் என மாளவிகா மோகனனின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து இருந்தார். நயன்தாராவின் இந்த பதிலடியை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் மாளவிகா மோகனன் தற்போது லேடி சூப்பர்ஸ்டார் பற்றி பேசி இருப்பதாக நெட்டிசன்கள் அவரை சாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 'டாடா' பட வெற்றிக்கு கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற கவின்!