சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித்துடன் கூட்டணி அமைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிவிட்டார். அதன்படி அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று படங்களையும் பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூர் தான் தயாரித்து இருந்தார்.
இதில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசாகி வெற்றிபெற்றது. இதில் பிங்க் என்கிற இந்தி படத்தின் ரீமேக் ஆகும். இதையடுத்து இவர்கள் கூட்டணியில் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. கடைசியாக அஜித் - எச்.வினோத் காம்போவில் வெளிவந்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பொங்கலுக்கு ரிலீசான இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன.? முழு விபரம் இதோ !!
இந்நிலையில், அஜித்தை வைத்து எச்.வினோத் இயக்கிய வலிமை படம் ரிலீசாகி கிட்டத்தட்ட ஓராண்டு ஆக உள்ள நிலையில், தற்போது அப்படம் மீது பரபரப்பு புகார் ஒன்று முன் வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி ராஜேஷ் என்பவர், கடந்த 2019-ம் ஆண்டு இயக்கி வெளியிட்ட தங்க சங்கிலி என்கிற குறும்படத்தின் 10 காட்சிகளை எச்.வினோத் திருடி விட்டதாகவும், அந்த காட்சிகள் அனைத்தையும் அவர் அஜித்தின் வலிமை படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக பலமுறை முயற்சித்தும் இயக்குனர் எச்.வினோத்தை தொடர்புகொள்ள முடியாததால், ராஜேஷ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படம் ரிலீசாகி ஓராண்டு ஆக உள்ள நிலையில், அப்படத்தின் மீது ஒருவர் கதை திருட்டு புகாரை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னர் வலிமை படம் ரிலீசானபோதே மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் இதுபோன்று ஒரு புகாரை முன்வைத்து இருந்தார். அதற்கு இயக்குனர் எச்.வினோத் பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... 'ஜெய் பீம்' நடிகர் மணிகண்டன் நடிக்கும் குறட்டையை மையப்படுத்தி தயாராகும் 'குட் நைட்'!