நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன.? முழு விபரம் இதோ !!

Published : Feb 11, 2023, 10:48 PM ISTUpdated : Feb 11, 2023, 10:52 PM IST

நடிகர் விஜய் சேதுபதியும், மகா காந்தியும் தங்கள் பிரச்னையை சமரசத்தின் மூலம் தீர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PREV
16
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன.? முழு விபரம் இதோ !!

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி நடிகர் விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையை சேர்ந்த துணை நடிகர் மகாகாந்தி என்பவரும் பெங்களூரு விமான நிலையத்தில் தாக்கி கொண்டனர் என்று கூறப்படுகிறது.

26

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மாககாந்தி,  விஜய் சேதுபதி தன்னை அவதூறாக பேசிவிட்டு, தாக்கியதாக கூறி அவர் மீது கிரிமினல் வழக்கு மற்றும் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

36

இம்மனுவை விசாரித்த சென்னை சைதப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்றம், இந்த வழக்கில் விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியது. பிறகு அடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை கோரியும், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரியும் விஜய்சேதுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதையும் படிங்க..‘ஊ சொல்றியா மாமா’ பாட்டை போடு.! புஷ்பா பட பாடலை நிறுத்திய கடைக்காரர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்

46

உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு மீதான விசாரணையை நடத்தலாம். அந்த விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என கடந்த ஜூலை 29ல் உத்தரவிட்டது.  அதே நேரம், பெங்களூரு விமான நிலையத்தில் இருவரும் பரஸ்பரம் தாக்கி கொண்ட விவகாரம் தொடர்பானது, சென்னை விசாரணை எல்லைக்கு உட்பட்டது அல்ல.

56

எனவே, இங்கு வழக்கு தொடர இயலாது என தெரிவித்து விஜய் சேதுபதிக்கு எதிரான புகாரை ரத்து செய்தும் உத்தரவிட்டது. சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

66

அந்த கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது தங்களிடையே உள்ள பிரச்னைகளை இரு தரப்பும் பரஸ்பரம் பேசி தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க..30 வயசு ஆச்சு.! இன்னும் திருமணம் ஆகாததால் பாதயாத்திரை செல்லும் ஆண்கள் - வினோத சம்பவம் !

Read more Photos on
click me!

Recommended Stories