வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார். லியோ படத்தில் த்ரிஷா, பிர்யா ஆனந்த், ஆக்ஷன் கிங் அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.
28
லியோ
காஷ்மீரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் அக்டோபர் 19 ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
38
விஜய்
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி68 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே போன்று தளபதி69 படத்தை இயக்குநர் வம்சி இயக்க இருப்பதாக தகவல் வெளி வந்தது. இதற்கிடையில் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரூ.900 கோடி பட்ஜெட் கொண்ட படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
48
ரூ.900 கோடி பட்ஜெட் மூவி
அதுமட்டுமின்றி இந்தப் படம் நீருக்கடியில் நடக்கும் அறிவியல் கதையை மையப்படுத்தி உருவாகும் பிரமாண்ட படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் பல சர்ச்சைகளை கடந்து ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்ததாக சொல்லப்படும் நிலையில், ஜவான், டைகர் 3 மற்றும் துங்கி ஆகிய படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். ஜவான் படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.
58
ஷாருக்கான்
ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, சுனில் குரோவர், யோகி பாபு, மன்சூர் அலிகான், தீபிகா படுகோனே (சிறப்பு தோற்றம்), விஜய் (சிறப்பு தோற்றம்), அஸ்தா அகர்வால், சஞ்சய் மல்கோத்ரா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.
68
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஷாருக்கான் கூட்டணி
ஜவான், டைகர் 3 மற்றும் துங்கி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் அறிவியல் கதை கொண்ட படத்தில் விஜய் உடன் இணைந்து ஷாருக்கான் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
78
விஜய் - ஷாருக்கான் கூட்டணி
தற்போது இயக்குநர் ஷங்கரும், கமல் ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் ஆர்சி15 (RC15) படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படங்களை முடித்த கையோடு விஜய், ஷாருக்கான் உடன் இணைந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
88
ரூ.900 கோடி பட்ஜெட் மூவி
இந்தப் படத்தை பிரபலமான 2 தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிரபார்க்கப்படுகிறது.