திருமண நிகழ்ச்சியில் பட்டு வேஷ்டி, சட்டையில் கமல் ஹாசன், அக்‌ஷய் குமார், அமீர் கான்!

First Published | Feb 11, 2023, 12:49 PM IST

டிஸ்னி ஸ்டார் டிஜிட்டல் நிறுவனத்தின் மேனேஜர் மற்றும் தலைவர் கே மாதவனின் மகன் திருமண நிகழ்ச்சியில் கமல் ஹாசன், அக்‌ஷய் குமார் மற்றும் அமீர் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

இந்தியன் 2

விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கமல் ஹாசன் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

அக்‌ஷய் குமார்

தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில், இயக்குநர் ஷங்கர் ராம் சரண் நடிப்பில் உருவாகும் RC15 படத்திற்காக பிஸியாக இருப்பதால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிற்கு சிறிது இடைவேளை விடப்பட்டுள்ளது.

Tap to resize

அக்‌ஷய் குமார்

ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் RC15 படத்தின் படப்பிடிப்பு பிஸியாக நடந்து வருகிறது. இதன் காரணமாக, கமல் ஹாசன் தனது நண்பரான டிஸ்னி ஸ்டார் நிறுவன தலைவர் கே மாதவனின் மகன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

கமல் ஹாசன்

அங்கு ஏற்கனவே பாலிவுட் ஸ்டார்ஸ் அக்‌ஷய் குமார் மற்றும் அமீர் கான் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் தவிர மலையாள நடிகர் மோகன் லாலும் கலந்து கொண்டுள்ளார்.

டிஸ்னி ஸ்டார் கே மாதவன்

இவர், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்து வருகிறார். இதற்காக 2 நாட்கள் கால்ஷீட் கொடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மரில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2

இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். நாயகன் படத்திற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து கமல் - மணிரத்னம் காம்பினேஷனில் இந்தப் படம் உருவாகிறது.

Latest Videos

click me!