பேரன், பேத்தியை பார்க்க வேண்டிய வயசுல 3ஆவது திருமணம் செய்த வாரிசு பட நடிகை!

Published : Feb 11, 2023, 10:00 AM IST

தெலுங்கு நடிகை ஜெயசுதா 3ஆவதாக தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.  

PREV
17
பேரன், பேத்தியை பார்க்க வேண்டிய வயசுல 3ஆவது திருமணம் செய்த வாரிசு பட நடிகை!
ஜெயசுதா திருமணம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தனது 12 ஆவது வயதில் பண்டாட்டி கபூரம் என்ற தெலுங்கு படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். குல கௌரவம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

27
ஜெயசுதா திருமணம்

சொல்லத்தான் நினைத்தேன், பெத்த மனம் பித்து, பாரத விலாஸ், தீர்க்க சுமங்கலி, ஆயிரத்தில் ஒருத்தி, தங்கத்தில் வைரம், செக்க சிவந்த வானம், தவசி, நினைத்தாலே இனிக்கும் என்று பல படங்களில் நடித்துள்ளார். கடந்த மாதம் திரைக்கு வந்த விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார்.

37
ஜெயசுதா

சினிமா வாழ்க்கையை தவிர்த்து, தனிப்பட்ட வாழ்க்கையில், இவர் வடே ரமேஷ் என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் ஜெயசுதா.

47
ஜெயசுதா திருமணம்

இதையடுத்து நிதின் கபூர் என்பவரை கடந்த 1985-ம் ஆண்டு 2-வது திருமணம் செய்தார். இவர்களுக்கு நிஹார் மற்றும் ஷ்ரேயன் என்று 2 மகன்கள் உள்ளனர். எதிர்பாராதவிதமாக நிதின் கபூர் கடந்த 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

57
ஜெயசுதா திருமணம்

ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்றிருந்த ஜெயசுதா, அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். பிறகு 2019 ஆம் ஆண்டு அந்தக் கட்சியிலிருந்து விலகி ஒய்எஸ்ஆர் கட்சியில் சேர்ந்தார். கணவர் மறைவுக்குப் பிறகு மகனின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தினார். இதில், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

67
ஜெயசுதா திருமணம்

ஏற்கனவே ஜெயசுதா 3ஆவதாக வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அந்த நபர் தனது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும், அதன் காரணமாகத் தான் அவர் தன்னுடன் பயணித்து வருவதாகவும் தெரிவித்து திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

77
ஜெயசுதா 3ஆவது திருமணம்

இந்த நிலையில், ஜெயசுதாவும் அந்த வெளிநாட்டு தொழிலதிபரும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories