இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் அடுத்ததாக அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை இயக்க கமிட் ஆனார். கடந்த ஆண்டு மார்ச் மாதமே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டது. அதோடு இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.