இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், மதுசூதனன் ராவ், லால், லிவிங்ஸ்டன், போஸ் வெங்கட், எம் எஸ் பாஸ்கர் ஆகியோரது நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான படம் டாணாக்காரன். முழுக்க முழுக்க போலீஸ் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.