இரும்புத்திரை படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இப்படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்த இப்படம் ஆன்லைனில் நடக்கும் நூதன மோசடிகளை தோலுரித்துக் காட்டியது. இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை ருசித்த பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைத்தார்.
25
சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய ஹீரோ திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. கல்வியில் நடக்கும் ஊழல்களைப் பற்றி பேசி இருந்த இப்படத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர்ஹீரோவாக நடித்திருந்தார். இரும்புத்திரையில் வில்லனாக மிரட்டிய ஆக்ஷன் கிங் அர்ஜுன் தான் இப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து நடிகர் கார்த்தி உடன் கூட்டணி அமைத்தார் மித்ரன்.
அதன்படி இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் சர்தார். கார்த்தி தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கப்படும் குடிநீரால் ஏற்படும் ஆபத்துக்களை வெளிச்சம் போட்டு காட்டிய இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்திருந்தனர். பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
45
இதற்கு அடுத்தபடியாக கே.ஜி.எஃப் நாயகன் யாஷுடன் பி.எஸ்.மித்ரன் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில், இன்று இயக்குனர் மித்ரனின் திருமணம் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. இவர் பிரபல சினிமா பத்திரிகையாளரான ஆஷாமீரா ஐயப்பன் என்பவரைத் தான் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமணத்தில் மேயாத மான், ஆடை போன்ற படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் அயலான் படத்தின் இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பி.எஸ்.மித்ரன் - ஆஷா மீரா ஜோடியில் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் கார்த்தி இயக்குனர் பி.எஸ்.மித்ரனின் திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம். இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.