நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..? சேலையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!

First Published | Sep 16, 2022, 3:52 PM IST

தமிழ் சினிமாவில், குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை தேவதர்ஷினி தற்போது தன்னுடைய மகளின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட அது வைரலாகி வருகிறது.
 

கல்லூரி படிக்கும் காலத்திலேயே.. ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பணியை துவங்கி பின்னர் 'கனவுகள் இலவசம்'  என்கிற சீரியல் தொடரில் அறிமுகமானார் தேவதர்ஷினி. இந்த தொடரில், படித்து கொண்டே நடித்த இவர், 'மர்மதேசம்' தொடரில் நடிக்க துவங்கிய பின்னர், எம்.காம் படிப்பை தொலைநிலைக் கல்வியில் படித்தார். இவரது நடிப்பு திறமைக்கு தீனி போடும் விதமாக அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் வர துவங்கியதால் ஆடிட்டர் ஆக வேண்டும் என்கிற கணவனை தூரம் தள்ளி வைத்து விட்டு, முழு நேர நடிகையாக மாறினார்.

தேவதர்ஷினி 'மர்மதேசம்' தொடரில் நடித்த போது, தன்னுடன் நடித்த சேத்தன் என்பவரை காதலிக்க துவங்கினார். சில காலம் காதலித்து வந்த இவர்கள்... பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமண வாழ்க்கையிலும் இணைந்தனர். திருமணத்திற்கு பிறகும், இவர் தொடர்ந்து நடிப்பை தொடர இவரது குடும்பம் மற்றும் கணவன் சேத்தன் ஆகியோர் உறுதுணையாக இருந்து வருவதாலேயே இத்தனை வருடங்கள் வெற்றிகரமாக ஒரு நடிகையாக நிலைத்து நிற்கிறார்.

மேலும் செய்திகள்: காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... அதுவும் பாகிஸ்தான் நாட்டு நடிகையுடன்...?
 

Tap to resize

2003 ஆம் வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்தில், நடிகர் விவேக்குக்கு ஜோடியாக நடித்திருந்தார் தேவதர்ஷினி. இந்த படத்திற்காக சிறந்த காமெடி நடிகைக்கான தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றார். இதை தொடர்ந்து, 'காக்ககாக்கா', 'எனக்கு 20 உனக்கு 18', 'காதல் கிறுக்கன்', என தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் அழுத்தமான குணச்சித்திர வேடத்தை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.

சிறந்த நடிப்புக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ள தேவதர்ஷினி தற்போது தன்னுடைய மகள் ஹீரோயின் லுக்கில் இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். 

மேலும் செய்திகள்: அடிதூள்... ஆஸ்கர் ரேஸில் ஆதிக்கம் செலுத்தும் ஆர்.ஆர்.ஆர். பட நாயகர்கள் - வெரைட்டி வெளியிட்ட வேறலெவல் அப்டேட்
 

தேவதர்ஷினி - சேத்தனின் மகள் நியதி விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான... 96 படத்தில் தேவதர்ஷினியின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே நியதி நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்ற நிலையில், 'பிகில்' படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது 10 ஆம் வகுப்பு படித்து வந்ததால் இந்த பட வாய்ப்பை நியதி ஏற்கவில்லை.

இதை தொடர்ந்து, கல்லூரி செல்ல தயாராகியுள்ள நியதியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை தேவதர்ஷினி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது. 

மேலும் செய்திகள்: உள்ளாடை மட்டும் அணிந்து... உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் - டிரெண்டாகும் கிளாமர் கிளிக்ஸ்
 

சிவப்பு நிற மெல்லிய சேலையை சிங்கிள் ப்ளீட் வைத்து கட்டி... கிறங்கடிக்கும் அழகில் தேவதையாக ஜொலிக்கிறார் நியதி. இதை பார்த்து நெட்டிசன்கள் பலர், ஹீரோயினாக நடிக்க நியதி தயார் ஆகிவிட்டதாக கூறி வருகிறார்கள். 

Latest Videos

click me!