பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அதேபோல் தீபிகா படுகோனேவும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஜவான் படத்தின் ஷூட்டிங், தற்போது சென்னையில் உள்ள ஆதித்ய ராம் பிலிம்சிட்டியில் நடைபெற்று வருகிறது.
நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன் கான் என்கிற மகன் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு மும்பையில் உள்ள சொகுசு கப்பல் ஒன்றில் நடைபெற்ற போதைப் பார்ட்டியில் கலந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கானை பெரும் போராட்டத்திற்கு பின்னர் ஜாமின் பெற்று வெளியே கொண்டு வந்தார் ஷாருக்கான்.
இதையும் படியுங்கள்... கொஞ்சம் கூட குறையாத அதே க்யூட்னஸ்...சேலையில் மனதை மயக்கும் ஜெனிலியா..
சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ஐபிஎல் ஆக்ஷனில், அவரது தந்தைக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகிகளுடன் கலந்துகொண்டார் ஆர்யன் கான். விரைவில் அவர் சினிமாவில் எண்ட்ரி கொடுக்க உள்ளதாகவும், வெப் தொடரில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.