புல்லரிக்க வைக்கும் பிரமாண்ட காட்சிகளுடன் எடுக்கப்பட்டிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் காரணமாக இப்படம் எடுக்க முடியாமல், இத்தனை வருடங்கள் தாமதமாகிக்கொண்டே சென்ற நிலையில், ஒருவழியாக தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாவலை, காட்சிப்படுத்தி திரைப்படமாக எடுப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். அதிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுப்பது என்பது அசாதாரணமான விஷயம் இதனை தான் தற்போது பல தடங்கல்களை கடந்து செய்து முடித்துள்ளார் மணிரத்னம்.
விஜய்யை தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு, நடிகர் சூர்யாவுக்கு கிடைத்தது. ஆனால் சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வந்ததால், பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு 'பொன்னியின் செல்வன்' கதையை மணிரத்னம் கூறியபோது, அவருக்கு மிகவும் பிடித்து போனது. ஆரம்பத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட இவர், படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டே சென்றதால், படத்தில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியானது.
அதே போல், தற்போது தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்பதால் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்ய பட்ட பின்னர் வெளியேறினார்.
மேலும், அமலாபால், சத்யராஜ், பார்த்திபன் போன்ற பிரபலங்களும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.