மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து நான்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர் விஜய் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தை அவர் இயக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
24
தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வரும் விஜய், அப்படத்தில் நடித்து முடித்த பின்னரே தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். லோகேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றதனால் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் இப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடிக்கடி வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி சமீபத்தில் நடிகை சமந்தா இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து இயக்குனர் ரத்னகுமாரும் இப்படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்பட்டது.
44
இந்நிலையில், இப்படம் குறித்த மேலும் ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு நான் வாழும் உலகம் என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் எடிட்டராக பணியாற்ற உள்ள பிலோமின் ராஜின் விக்கிபீடியா பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளதால் இதுதான் தளபதி 67 படத்தின் டைட்டிலாக இருக்கும் என கூறி வருகின்றனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இது கவுதம் மேனன் பட டைட்டில் போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.