பிரபல நடிகையும், தற்போதைய ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா மிக சிறிய வயதில், தன்னுடைய திறமையை வெளிக்காட்டி பெற்றுள்ள விருதுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகர்களின் பிள்ளைகள் நடிகர்களாக தான் வரவேண்டும், என்கிற கண்ணோட்டத்தை தற்போதைய நடிகர் - நடிகைகள் மாற்றி வருகிறார்கள். தங்களுடைய பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்குகிறார்கள்.
27
அந்த வகையில் நடிகை ரோஜாவின் மகளுக்கு நடிக்க வாய்ப்புகள் இருந்தும், அவர் தனக்கு பிடித்ததை விரும்பி செய்து அதில் வைரமாய் ஜொலிக்கிறார்.
நடிகை ரோஜா - இயக்குனர் செல்வமணி ஆகிய நட்சத்திர தம்பதிகளின் மகளான அன்ஷு மாலிகா சமீப காலமாக வெப் டெவலப்பிங் மற்றும் கண்டெண்ட் ரைட்டிங் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.
47
தற்போது மிக சிறந்த எழுத்தாளராக தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் எழுதிய 'தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்', என்கிற புத்தகம் 'ஜி டவுன் என்ற இதழில் வெளியானதை தொடர்ந்து தற்போது தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை தட்டி சென்றுள்ளார்.
இளம் வயதில் ஒரு எழுத்தாளராக விருது பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல, எனவே அன்ஷு மாலிகா, நடிகையும், அமைச்சருமான அம்மாவையே தன்னுடைய திறமையால் மிஞ்சி விடுவார் போல... என நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
67
சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்டு, பிரபல பாலிவுட் நடிகை சஜன் கைகளால் விருது பெற்ற புகைப்படத்தை ரோஜாவின் மகள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே போல் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அன்ஷு மாலிகாவை அழைத்து பேசிய புகைப்படங்கள் சில வற்றையும் இவர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.