தமிழ் சினிமா நடிகைகளின் Xerox போல் இருக்கும் 7 சீரியல் ஹீரோயின்கள்!

Published : Sep 17, 2024, 02:20 PM ISTUpdated : Sep 17, 2024, 02:28 PM IST

ஒரு சில சீரியல் நடிகைகள் பார்ப்பதற்கு சினிமா ஹீரோயின் போலவே இருக்கும் நிலையில், அவர்கள் யார்.. யார் என்பதை இந்த தொகுப்பின் மூலம் பார்க்கலாம்.  

PREV
17
தமிழ் சினிமா நடிகைகளின் Xerox போல் இருக்கும் 7 சீரியல் ஹீரோயின்கள்!
Pavithra Lakshmi

பவித்ரா லட்சுமி:

நடிகையும், மாடலுமான பவித்ரா லட்சுமி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஓகே கண்மணி' திரைப்படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இவருக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது சின்னத்திரை நிகழ்ச்சிகள் தான். கடந்த 2021-ஆம் ஆண்டு ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்திய பவித்ரா லட்சுமி, பார்ப்பதற்கு ஒரு சாயலில் அச்சு அசல் சமந்தா போலே இருப்பார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர், சதீஷ் ஹீரோவாக நடித்த 'நாய் சேகர்' படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது தமிழில் மட்டும் இன்றி, மலையாள திரையுலகிலும் கவனம் செலுத்திவரும் பவித்ரா, தமிழில்... யூகி, ஜிகிரி தோஸ்த், மற்றும் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 

27
Sujitha Dhanush

சுஜிதா தனுஷ்:

கேரளாவில் பிறந்த நடிகை சுஜிதா, தன்னுடைய 1 வயதிலேயே திரையுலகில் அப்பாஸ் என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து தமிழில் பாக்யராஜ் நடித்த முந்தானை முடுச்சு படத்திலும் பாக்யராஜின் குழந்தையாக நடித்திருந்தார். பின்னர் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் சுமார் 50-திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதே போல் குணச்சித்திர வேடத்திலும் பல படங்களில் நடித்தார். இவரை சிறு வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக ரசிகர்கள் பார்த்ததால் என்னவோ, இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. திரைப்படங்கள் மட்டும் இன்றி ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக பாண்டியன் ஸ்டார் சீரியல் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதே போல் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு முதல் ஃபைனலிஸ்ட்டாக தேர்வானார். இவர் பார்ப்பதற்கு அப்படியே நடிகை மீரா ஜாஸ்மின் போலவே இருப்பார்.

ஆள் மயக்கி.. பிரியங்கா வாழ்க்கை பறிபோக இதுதான் காரணமா? பயில்வான் ரங்கநாதன் கூறிய பகீர் தகவல்!

37
Gomathi Priya:

கோமதி பிரியா:

ஐடி துறையில் பணியாற்றிய கோமதி பிரியா, நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக 2018-ஆம் ஆண்டு, கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஓவியா' என்கிற சீரியலில் நடிக்க கமிட் ஆனார். இதை தொடர்ந்து, விஜய் டிவியில் இவர் நடித்த வேலைக்காரன் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து 
தற்போது தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாக விஜய் டிவியில் இவர் நடித்து வரும் சிறகடிக்க ஆசை சீரியல்... TRP-யில் ஒவ்வொரு வாரமும் பட்டையை கிளப்பி வருகிறது. இவரின் கண்கள், உதடு, முகவெட்டு அப்படியே பிரபல நடிகை பானுபிரியா போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறுவது உண்டு.

47
Roshni Haripriyan:

ரோஷ்ணி ஹரிப்ரியன்:

விஜய் டிவி சீரியலின் டஸ்கி ஸ்கின் அழகியான ரோஷ்ணி ஹரிபிரியன் ஒரு மாடலாக இருந்து பின்னர், சீரியல் நடிகையாக மாறியவர். இவர் நடித்த பாரதி கண்ணம்மா சீரியல் மூன்று வருடங்கள்... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்ததோடு, ரோஷ்ணிக்கு பல திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது. மேலும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு கலக்கினார். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த கருடன் படத்திலும் ரோஷ்ணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் பார்ப்பதற்கு நடிகை நந்திதா தாஸ் போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ராஜ குடும்பத்தில் பிறந்த நடிகை அதிதி - சித்தார்த் ஜோடியின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

57
Kanmani Manoharan:

கண்மணி மனோகரன்:

ரோஷ்ணி நடித்த பாரதி கண்ணம்மா சீரியலில், அவரின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் கண்மணி மனோகரன். முதல் சீரியலிலேயே ஒரு வில்லியாக தன்னுடைய தரமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவர், பின்னர் அந்த சீரியலில் இருந்து வெளியேறி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அமுதாவும் அன்ன லட்சுமியும்' தொடரில் ஹீரோயினாக நடித்தார். இதை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில், வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த வாரம் தொகுப்பாளர் அஸ்வந்த்தை திருமணம் செய்து கொண்ட கண்மணி பார்ப்பதற்கு அஞ்சலி போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

67
Lakshmi Priya:

லட்சுமி பிரியா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் லட்சுமி பிரியா இதற்க்கு முன்பு சில சீரியல்களில் நடித்திருந்தாலும், இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது 'மகாநதி' தொடர் தான். இந்த சீரியலில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த மிகவும் தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லட்சுமி ப்ரியா. இவரை பார்க்க ஒரு ஜாடையில் பிரபல நடிகை சுனைனா போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அருண் விஜய் மகளா இது? ஹீரோயின் போல் இருக்காங்களே.. அத்தை அனிதாவோடு ஓணம் கொண்டாடிய போட்டோஸ்!
 

77
Mounika Subramaniyan:

மௌனிகா சுப்பிரமணியம்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி, தற்போது வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் கார்த்திகை தீபம் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமானார் தான் மௌனிகா சுப்பிரமணியம். இதை தவிர விஜய், மற்றும் சன் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் பார்ப்பதற்கு நடிகை சதா போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறுவது உண்டு.

Read more Photos on
click me!

Recommended Stories