ஒரு வருடத்தில் 21 படமா! ஒரே ஆண்டில் அதிக படங்களில் நடித்த தமிழ் ஹீரோஸ் லிஸ்ட் இதோ

First Published | Sep 17, 2024, 12:50 PM IST

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே ஆண்டில் அதிக படங்களில் நடித்த ஹீரோக்கள் பற்றியும், அவர்கள் எத்தனை படங்களில் நடித்தார்கள் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Tamil cinema actors who acted most number of movies in a year

இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் ஒரு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று படங்கள் நடிப்பதே அபூர்வமாக உள்ளது. அப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் ஒரே ஆண்டில் 15 முதல் 21 படங்களில் நடித்திருக்கிறார்கள். அந்த நடிகர்கள் யார், எந்த ஆண்டு அவர்கள் அதிக படங்களில் நடித்தார்கள் என்பதை பார்க்கலாம்.

விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் 1984-ம் ஆண்டில் மட்டும் 17 படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் 1985-ம் ஆண்டு 15 படங்களிலும் நடித்திருந்தார். இதில் நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களும் அடங்கும்.

Mike Mohan

சரத்குமார்

1980 மற்றும் 90களில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் சரத்குமார். அவர் நடித்த சூரியவம்சம், நாட்டாமை போன்ற படங்கள் இன்றளவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இப்படி பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சரத்குமார், கடந்த 1990 மற்றும் 1991-ம் என இந்த இரண்டு ஆண்டுகளில் தலா 15 படங்கள் வீதம் அவர் மொத்தமாக 30 படங்களில நடித்திருக்கிறார். 

மைக் மோகன்

1980-களில் தமிழ் சினிமாவில் டிரெண்டிங் ஸ்டாராக வலம் வந்தவர் மைக் மோகன். இவர் நடித்த படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக ஹிட்டடித்த காலம் அது. அப்படி 1984-ம் ஆண்டு மட்டும் மைக் மோகன் 19 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

இதையும் படியுங்கள்... ரஜினி படத்துக்காக கண்ணதாசன் அரை தூக்கத்தில் எழுதுன பாட்டு... தேசிய விருது வென்ற கதை தெரியுமா?

Tap to resize

Coolie Movie Update

ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து தமிழ் சினிமாவில் கோலோச்ச தொடங்கிய ரஜினிகாந்த், 1977-ம் ஆண்டில் மட்டும் 19 படங்களில் நடித்திருந்தார். அதேபோல் 1978-ம் ஆண்டு அவர் நடிப்பில் 16 படங்கள் திரைக்கு வந்தன. இதில் புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், ப்ரியா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களும் அடங்கும்.

சத்யராஜ்

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என விதவிதமான கேரக்டர்களில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் சத்யராஜ். அவர் சினிமாவில் 1984 மற்றும் 1985 அகிய ஆண்டுகளில் உச்சத்தில் இருந்தார். அதில் 1984-ல் 20 படங்களும் 1985-ல் 21 படங்களிலும் நடித்திருந்தார் சத்யராஜ். அவரின் இந்த சாதனை இன்றளவும் முறியடிக்கப்படாமல் உள்ளது.

Kamalhaasan

கமல்ஹாசன்

சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். இவரைப்போன்று பிசியாக நடித்த நடிகர்களே இல்லை என சொல்லலாம். ஏனெனில் இதற்கு முன்னர் பார்த்த நடிகர்கள் எல்லாம் ஒரே ஆண்டில் பீக்கில் இருந்தவர்கள். ஆனால் கமல்ஹாசன் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அதிக படங்களில் நடித்திருக்கிறார். 

அதன்படி 1975-ல் 16 படங்களில் நடித்த கமல்ஹாசன், 1976-ல் 18 படங்களில் நடித்திருந்தார். அதேபோல் 1977-லும் 18 படங்களில் நடித்த கமல், அதிகபட்சமாக 1978-ம் ஆண்டு 19 படங்களில் நடித்திருக்கிறார் கமல்ஹாசன். இந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் கமல்ஹாசன் நடித்த படங்களின் எண்ணிக்கை 73 என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  ஸ்ருதிஹாசன் கடத்தப்பட்டாரா? உண்மை சம்பவத்தை படமாக எடுத்து தேசிய விருது வாங்கிய கமல் - அது எந்த படம்?

Latest Videos

click me!