ஆள் மயக்கி.. பிரியங்கா வாழ்க்கை பறிபோக இதுதான் காரணமா? பயில்வான் ரங்கநாதன் கூறிய பகீர் தகவல்!

First Published | Sep 17, 2024, 12:13 PM IST

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா குறித்து, மணிமேகலை முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து.. பிரியங்கா பற்றிய தகவல் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், பயில்வான் ரங்கநாதன் பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 

Manimegalai vs Priyanka Deshpande

சன் மியூசிக் தொலைக்காட்சியில், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க துவங்கிய மணிமேகலை... பின்னர் மெல்ல மெல்ல, சன் மியூசிக் தொலைக்காட்சியிலேயே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இஸ்லாம் மதத்தை சேர்ந்த, நடன இயக்குனர் ஹுசைன் என்பவரை குடும்பத்தை மீறி, கரம்பிடித்ததால்... பெற்றோரின் கோபத்திற்கு ஆளான மணிமேகலை, பொருளாதார ரீதியில் சில கஷ்டங்களை சந்தித்த போதிலும் ஹுஸைனுடன் தன்னுடைய வாழ்க்கையை இனிமையாக துவங்கினார். 

மணிமேகலை வாய்ப்புக்காக போராடிவந்த போது இவருக்கு கை கொடுத்தது விஜய் டிவி தான். விஜய் டிவியில், தன்னுடைய கணவருடன் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணிமேகலை, அடுத்தடுத்து சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினார். பின்னர் தொகுப்பாளராகவும் மாறிய மணிமேகலையை... மிகவும் பிரபலமடைய வைத்தது, குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். 2019-ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக கலந்து கொண்டு கலக்கினார். இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இருந்தது. மணிமேகலையுடன் கோமாளியாக இருந்த ஷிவாங்கி சமையல் கற்று கொண்டு, இந்த நிகழ்ச்சியிலேயே குக்காக மாறியதால்... இவர் திடீர் என இனி கோமாளியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது என முடிவெடுத்ததாக கூறப்பட்டது.

Anchor Manimegalai

இதை தொடர்ந்து, குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில்... மணிமேகலை ரக்ஷனுடன் சேர்ந்து, தொகுப்பாளராக களமிறங்கினார். தன்னுடைய காமெடியான பேச்சால், அரங்கையே அதிர வைத்து வந்த மணிமேகலை, குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளரான பிரியங்காவின் தலையீடு... தன்னுடைய ஆங்கரிங்கை அதிகம் பாதித்தால், செமி ஃபைனல் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறியதோடு மட்டும் இன்றி, இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என கூறி... தனக்கு சுயமரியாதை முக்கியம் என்பதையும் தெரிவு படுத்தி இருந்தார். கடைசியில் இதற்க்கு காரணம் ப்ரியங்கா தான் என்பதையும் மணிமேகலை கூறியதை தொடர்ந்து பலர் பிரியங்காவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். 

ஓடிடியில் போட்டியின்றி ரிலீஸ் ஆகும் தங்கலான் மற்றும் டிமாண்டி காலனி 2 - எப்போ ரிலீஸ் தெரியுமா?

Tap to resize

Suchitra Allegation

அந்த வகையில் பாடகி சுசித்ரா, ப்ரியங்கா பற்றி பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்... சித்திரா பேசியது, மற்றும் ப்ரியங்காவுக்கு நோஸ் கட் கொடுத்தது என பல்வேறு தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். இந்த சம்பவம் குறித்து மேலோட்டமாக பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், "சுசித்ரா தன்னுடைய வீடியோவில், பிரியங்கா தன்னுடைய தம்பியின் மனைவி. அவன் கல்யாணம் பண்ணும் போதே அவள் வேண்டாம் என நான் கூறினேன், ஆனால் அப்போது அவன் கேட்கவில்லை. அவனுடைய வாழ்க்கையை கெடுத்தது பிரியங்கா தான் என்கிற குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஆங்கரை விட ப்ரொடியூசர் என்பது பெரிய பதவி. ஒரு ஆங்கர் ப்ரொடியூசரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் அவரிடம் இருந்து விலகியுள்ளார். 

சுசித்ராவின் கருத்துப்படி என்ன சொல்கிறார் என்றால், "அவள் ஒரு ஆள் மயக்கி, சிரிச்சு சிரிச்சு பேசியே ஒருவரின் பலவீனத்தை தெரிந்து கொண்டு அவர்களை ஆளுமை படுத்திவிடுவார். ஒருவன் காதலிக்கும் போது, எல்லாவற்றையும் விழுந்து விழுந்து செய்வான். காதலியை பத்திரமாக பார்த்துக் கொள்வான். ஆனால் இதையே ஒரு காரணமாக வைத்து, திருமணத்திற்கு பின்பு அவனை அடிமைப்படுத்த நினைத்தார்.அப்படி அடிமைப்படுத்த நினைக்கும் போது தான் பிரியங்காவின் கணவர் அவரிடம் இருந்து விலக முடிவு செய்தார் அப்படி என்று சுசித்ரா சொல்றாங்க. அதேபோல் பிரியங்காவின் அம்மா கூறும்போது, அவள் ஒரு தனி டைப் பொண்ணு தான். அவளுக்கு இப்போது திருமணம் செய்து கொள்ள ஆர்வம் இல்லை என கூறுகிறார். அதே போல் அவருக்கு சில நோய்களும் இருக்கிறது, ஆனால் அவை வெளியே தெரியாது என கூறி உள்ளார்.  

Bayilvan Ranganathan About Priyanka

பொதுவாக சுசித்ரா எல்லா விஷயங்களிலும் முந்திக்கொண்டு பேசுவார். ஆனால் இது அவருடைய தம்பியின் வாழ்க்கை பர்சனல் விஷயங்கள் சம்பந்தப்பட்டது. எனவே இந்த விஷயம் குறித்து நாம் பேசும்போது, நாம் விசாரிக்க வேண்டி உள்ளது. அதேபோல் தன்னுடைய சொந்த தம்பி என அந்த பதிவில் சுசித்ரா கூறவில்லை. தன்னுடைய தம்பி என்று ஏதோ ஒரு முறையில் வரும் சொந்தம் என்று தான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய பயில்வான், விஜய் டிவியில் ஆரம்ப கட்டத்தில் இருந்த பாவனா போன்ற தொகுப்பாளின்கள் வெளியேறிய போதும், பிரியங்காவுக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட வரவேற்பு விஜய் டிவி கொடுக்கிறது என முன் வைக்கப்பட்ட கேள்விக்கு... பிரியங்காவுக்கு நேயர்கள் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அதனால் தான் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என எதார்த்தமான விஷயங்களை பேசியுள்ளார்.

ராஜ குடும்பத்தில் பிறந்த நடிகை அதிதி - சித்தார்த் ஜோடியின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
 

BiggBoss Vs Priyanka

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் இருந்தே, கமல்ஹாசனிடம் சில அதிகாரங்களை பிக்பாஸ் பறித்துக் கொண்டார் என்பது நீங்கள் அந்த நிகழ்ச்சியை பார்த்தல் தெரியும். அது கமலஹாசனுக்கு ஒரு நெருடலை கொடுத்தது அந்த ரணம் தான், இனி பிக் பாஸ் நமக்கு வேண்டாம் என ஒரேயடியாக எட்டாவது சீசனில் கமல்ஹாசன் விலகிக் கொண்டார். அதே போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரியங்கா கலந்து கொண்ட போது சில விஷயங்களில் நோஸ்கட் வாக்கியத்தையும் குறிப்பிட்டு பேசி இருந்தார் இருந்தார் பயில்வான் ரங்கநாதன். அதேபோல் ஒருமுறை பிரியங்காவின் பேட்டியில் கலந்து கொண்ட போது தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்தும், பிரியங்காவுக்கு நான் நோஸ்கட் கொடுத்துள்ளேன் என்பதையும் பல்வான ரங்கநாதன் தெரிவித்திருந்தார்.  பிரியங்காவின் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசாவிட்டாலும் சுசித்ரா சொல்வது உண்மையாக இருக்கலாம் என்கிற கருத்தை ஆணித்தனமாக அடித்து பேசி உள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Latest Videos

click me!