Lyricist Kannadasan
கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஏனெனில் இந்த படத்தின் மூலம் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகமானார். அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி, கமல்ஹாசன் ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். இப்படத்துக்காக அவர் இசையமைத்த பாடல் ஒன்றிற்கு கண்ணதாசன் தூக்க கலக்கத்தில் எழுந்து எழுதிய பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. அது என்ன பாடல் என பார்க்கலாம்.
'அபூர்வ ராகங்கள்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாடலுக்கான கலந்துரையாடல் நடைபெற்றபோது, எம்.எஸ்.வியும், இயக்குனர் கே.பாலசந்தரும் பேசிக்கொண்டிருந்தார்களாம். அந்த சமயத்தில் கமல்ஹாசனும் உடனிருந்திருக்கிறார்.
Apoorva raagangal
சரி பாடலுக்கான ஒத்திகையை பார்க்கலாமா என பாலச்சந்தர் கேட்டபோது, நாளைக்கு வச்சுக்கலாமா என எம்.எஸ்.வி கேடிருக்கிறார். ஏன் என்று பாலச்சந்தர் கேட்டவுடன் கண்ணதாசன் பாடல் வரிகள் இன்னும் வராத விஷயத்தை சொல்லி இருக்கிறார் எம்.எஸ்.வி. இதனால் கடும் கோபமடைந்தாராம் பாலச்சந்தர்.
பெரிய கவிஞராக இருந்தாலும் அவரின் பாடல் வரிகளுக்காக எத்தனை நாள் காத்துக்கிடப்பது என கோபத்தில் சத்தமிட்ட பாலச்சந்தரை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார் எம்.எஸ்.வி. அப்போது கண்ணதாசன் மேல் தளத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் விஷயம் அறிந்த கமல் அதை பாலச்சந்தரிடம் சொல்லி இருக்கிறார்.
Kannadasan, K Balachander, MSV
இதைக்கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற பாலச்சந்தர், ரொம்ப சந்தோஷம், அப்போ நானும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தூங்கட்டுமா என கத்தி இருக்கிறார்.
பாலச்சந்தரின் சத்தம் கேட்டு எழுந்த கண்ணதாசன், அரைத்தூக்கத்தில் அவர் கூறியதை எல்லாம் மேலே இருந்து கேட்டுக்கொண்டே இருந்தாராம். பாலச்சந்தரை சமாதானப்படுத்த முடியாததால் எம்.எஸ்.வி அங்கிருந்து சென்றுவிட, ஒரு மணிநேரம் கடந்த பின்னர் போய் அவர் எழுந்துட்டாரானு பாருங்கய்யா என ஒருவரை அனுப்பி இருக்கிறார். அந்த நபர் மேலே சென்று பார்த்தபோது கண்ணதாசன் அங்கு இல்லை.
இதையும் படியுங்கள்... நாகேஷ் வாயை கிளறி விட்டு... 10 நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய ஹிட் பாடல்!
Kannadasan, K Balachander
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கவிஞர் எங்கே என உதவியாளரிடம் கேட்க, அவர் பாடலை எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டதாக சொல்லி இருக்கிறார். அவர் எப்போது சென்றார் என்று யாருமே பார்க்கவில்லை. உடனே அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு வந்து பாலச்சந்தரிடம் கொடுத்திருக்கிறார் அவரின் உதவியாளர் அனந்து.
என்னத்த எழுதி இருக்கப்போராரு என வேண்டா வெறுப்பாக அந்த வரிகளை வாசிக்க தொடங்கிய பாலச்சந்தருக்கு அப்போது தான் காத்திருந்தது ஆச்சர்யம். பேப்பரில் கவிதையாக படர்ந்திருந்த கண்ணதாசனின் வரிகளை பார்த்து வாயடைத்துப் போனாராம் பாலச்சந்தர்.
Vani Jayaram
ஏனெனில் அதில் ஏழு வகையான பாடல்களை எழுதி வைத்திருந்தாராம் கண்ணதாசன். அதில் எதை எடுப்பது, எதை விடுவது என தெரியாமல் திக்குமுக்காடி இருக்கிறார் பாலச்சந்தர்.
அப்படி கண்ணதாசன் எழுதிய 7 பாடல்களில் ஒன்று தான் அபூர்வ ராகங்கள் படத்தில் இடம்பெற்ற ஏழு ஸ்வரங்களுக்குள் என்கிற பாடல். இந்த பாடலை பாடகி வாணி ஜெயராம் பாடி இருந்தார். இப்படி கண்ணதாசன் தூக்க கலக்கத்தில் எழுதிய இந்த பாடல் தான் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியதோடு தேசிய விருதையும் வென்றது. இப்பாடலை பாடிய வாணி ஜெயராம் சிறந்த பாடகிக்கான தேசிய விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தளபதி படத்தோடு முடிந்த உறவு.. 32 ஆண்டுகளாக இளையராஜாவிடம் செல்லாத மணிரத்னம் - ஏன்?