தேனியில் ‘இட்லி கடை’ ஆரம்பித்த தனுஷ்... சுடச்சுட வந்த சூப்பர் அப்டேட்

First Published | Sep 17, 2024, 8:32 AM IST

Dhanush Next Movie : நடிகர் தனுஷ் இயக்கிய ராயன் படம் மாஸ் வெற்றியை ருசித்த நிலையில், அவர் சைலண்டாக செய்து வரும் மற்றொரு சம்பவம் பற்றி பார்க்கலாம்.

Dhanush

தனுஷ் தலைசிறந்த நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் நடிப்பையும் தாண்டி இயக்குனராகவும் தன்னுடைய திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அவர் இயக்கிய முதல் படம் பா பாண்டி. கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. பா.பாண்டி படத்தின் வெற்றிக்கு பின் தனுஷ் வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை இயக்கினார். ஆனால் அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

Raayan dhanush

இதைத் தொடர்ந்து 7 ஆண்டுகளாக டைரக்‌ஷன் பக்கம் செல்லாமல் இருந்த தனுஷ், ராயன் படம் மூலம் மீண்டும் இயக்குனராக களமிறங்கினார். இது நடிகர் தனுஷின் 50வது படமாகும். தனுஷின் கெரியரில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ராயன் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்தது. திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்திய ராயன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. தனுஷின் கெரியரில் அதிக வசூல் செய்த படமும் இதுதான்.

Tap to resize

Director Dhanush

ராயன் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பிரேமலு ஸ்டைலில் ஃபீல் குட் படமாக இது தயாராகி வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையும் படியுங்கள்... ஓடிடியில் போட்டியின்றி ரிலீஸ் ஆகும் தங்கலான் மற்றும் டிமாண்டி காலனி 2 - எப்போ ரிலீஸ் தெரியுமா?

Dhanush, Nithya Menen

ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி முடித்த தனுஷ், தற்போது தான் இயக்கும் நான்காவது படத்திற்கான வேலைகளையும் தொடங்கி இருக்கிறார். அவர் இயக்கும் 4-வது படத்தில் நித்யா மேனன் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்கு முன்னர் அவர் தனுஷுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்காக நடிகை நித்யா மேனனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

Arun Vijay, Dhanush

இப்படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக தான் நடிக்கிறார் நித்யா. இப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைக்கிறார். அவர் இதுவரை 2 பாடல்களை கம்போஸ் செய்து முடித்துள்ளாராம். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருகிறதாம். இதன் பாடல்காட்சியை தற்போது படமாக்கி வருகிறாராம் தனுஷ். நடன இயக்குனராக பாபா பாஸ்கர் பணியாற்றி வருகிறாராம். மேலும் இப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக அருண் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு நடிகர் தனுஷ் இட்லி கடை என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... இந்த தடவ என்ன கதை சொல்லப்போறாரோ? மாஸ் ஸ்பீச்சுடன் தயாரான "தலைவர்" - வேட்டையன் இசை வெளியீடு அப்டேட்!

Latest Videos

click me!