முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற உடனடியாக மலையாள மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் மணிரத்னம். 1984ம் ஆண்டு வெளியான அந்த திரைப்படத்திற்கும் இசையமைத்தது இளையராஜா தான். தன்னுடைய இரண்டு திரைப்படங்களுமே கன்னடம் மற்றும் மலையாள மொழியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தமிழ் திரை உலகின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்படுகிறது. பிரபல நடிகர் முரளி நடிப்பில் 1985ம் ஆண்டு வெளியான "பகல் நிலவு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கோலிவுட் பயணத்தை மணிரத்தினம் தொடங்குகிறார். அந்த திரைப்படத்திற்கும் இசையமைத்தது இளையராஜா தான்.
தொடர்ச்சியாக "இதய கோவில்", "மௌன ராகம்", "நாயகன்", "அக்னி நட்சத்திரம்", "கீதாஞ்சலி", "அஞ்சலி" மற்றும் "தளபதி" என்று தொடர்ச்சியாக 8 திரைப்படங்கள் இளையராஜாவோடு பணியாற்றினார் மணிரத்தினம்.