ஓடிடியில் போட்டியின்றி ரிலீஸ் ஆகும் தங்கலான் மற்றும் டிமாண்டி காலனி 2 - எப்போ ரிலீஸ் தெரியுமா?

Published : Sep 17, 2024, 07:44 AM IST

Thangalaan and Demonte colony 2 OTT release : தியேட்டரில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆன தங்கலான் மற்றும் டிமாண்டி காலனி 2 திரைப்படங்கள் ஓடிடியில் போட்டியின்றி ரிலீஸ் ஆக உள்ளன.

PREV
14
ஓடிடியில் போட்டியின்றி ரிலீஸ் ஆகும் தங்கலான் மற்றும் டிமாண்டி காலனி 2 - எப்போ ரிலீஸ் தெரியுமா?
Thangalaan Movie

பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்த படம் தங்கலான். கேஜிஎப்-ல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தனர். இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்திருந்தார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.

24
Thangalaan OTT Release Date

தங்கலான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இந்த நிலையில், தங்கலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 20ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமையை அந்நிறுவனம் ரூ.35 கோடிக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தளபதி படத்தோடு முடிந்த உறவு.. 32 ஆண்டுகளாக இளையராஜாவிடம் செல்லாத மணிரத்னம் - ஏன்?

34
Demonte colony 2

மறுபுறம் ஆகஸ்ட் 15-ந் தேதி தங்கலான் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன மற்றொரு படம் டிமாண்டி காலனி 2. அஜய் ஞானமுத்து இயக்கிய இப்படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா, குக் வித் கோமாளி பிரபலம் மாரிமுத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்து இருந்தார்.

44
Demonte colony 2 OTT release Date

டிமாண்டி காலனி 2 திரைப்படம் வெறும் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்திய இப்படம் ரூ.85 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. இந்த நிலையில், டிமாண்டி காலனி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 27-ந் தேதி டிமாண்டி காலனி 2 திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்...  இந்த தடவ என்ன கதை சொல்லப்போறாரோ? மாஸ் ஸ்பீச்சுடன் தயாரான "தலைவர்" - வேட்டையன் இசை வெளியீடு அப்டேட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories