சைந்தவியை பிரிந்த ஜிவி பிரகாஷ்... மகனின் விவாகரத்து பற்றி மனம்திறந்த ஏ.ஆர்.ரெஹானா

First Published | Sep 17, 2024, 2:09 PM IST

GV Prakash - Saindhavi Divorce : பாடகி சைந்தவியை விவாகரத்து செய்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் பற்றி அவரது தாயார் ஏ.ஆர்.ரெஹானா சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.

AR Reihana About GV Prakash - saindhavi Divorce

கோலிவுட்டில் இது விவாகரத்து சீசன் என சொல்லும் அளவுக்கு தமிழ் திரையுலகில் ஏராளமான பிரபலங்கள் தொடர்ந்து விவாகரத்து பெற்று பிரிந்த வண்ணம் உள்ளனர். தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடி 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் கடந்த 2022-ம் ஆண்டு பிரிந்தனர். இதையடுத்து அண்மையில் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்தார். இவர்கள் 15 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின்னர் பிரிந்தனர். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.

GV Prakash - saindhavi

இதுதவிர ஜிவி பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி ஜோடியும் இந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இவர்களுக்கு அன்வி என்கிற பெண் குழந்தையும் உள்ளது. ஜிவி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும்போதில் இருந்தே காதலித்து வந்தனர். குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு கடந்த 2020-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

இதையும் படியுங்கள்... ஒரு வருடத்தில் 21 படமா! ஒரே ஆண்டில் அதிக படங்களில் நடித்த தமிழ் ஹீரோஸ் லிஸ்ட் இதோ

Tap to resize

GV Prakash - saindhavi Divorce

திருமணத்துக்கு முன்னர் வரை சினிமாவில் இசையமைப்பாளராக மட்டும் பணியாற்றி வந்த ஜிவி பிரகாஷ், அதன்பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் குவிந்ததால், இசையமைப்பதை ஓரங்கட்டிவைத்துவிட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் ஜிவி பிரகாஷ். தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ள ஜிவி பிரகாஷ் குமார், கிங்ஸ்டன் என்கிற படத்தை தயாரித்து வருகிறார்.

GV Prakash - saindhavi

கிங்ஸ்டன் படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடிக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனிடையே ஜிவி பிரகாஷின் விவாகரத்து பற்றி அவரது தாய் ரெஹானா முதன்முறையாக பேசி இருக்கிறார். மாத்திக்கலாம் மாலை என்கிற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ள அவர், அதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டார்.

அப்போது ஜிவி பிரகாஷ் விவாகரத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரெஹானா, சூழ்நிலை சிலருக்கு அப்படி அமைந்து விடுகிறது. அதற்கு நாம் என்ன செய்ய முடியும் எனக் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... ரஜினி படத்துக்காக கண்ணதாசன் அரை தூக்கத்தில் எழுதுன பாட்டு... தேசிய விருது வென்ற கதை தெரியுமா?

Latest Videos

click me!