நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் கமலஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ளது ‘தக் லைஃப்’ திரைப்படம். படம் குறித்து பலருக்கும் தெரியாத 7 சுவாரஸ்ய தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
‘தக் லைஃப்’ படத்தின் கதை முதலில் ‘அமர் ஹைன்’ என்ற படத்திற்காக எழுதப்பட்டது. பின்னர் மணிரத்னம் அந்த கதையை தனது சொந்த கதைக்கு ஏற்ப மாற்றி வடிவமைத்துக் கொண்டார்.
27
மாற்றப்பட்ட நடிகர்கள்
ஆரம்பத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் ரவி மோகன் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரை நடிக்க வைக்க பரிசீலிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்குப் பதிலாக சிம்பு மற்றும் அசோக் செல்வன் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
37
மீண்டும் இணைந்த நடிகர்கள்
கமலஹாசன் - மணிரத்னம் மட்டுமல்லாம் பல நடிகர்களும் ‘தக் லைஃப்’ படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். ‘விருமாண்டி’ படத்திற்குப் பின் கமலஹாசன் - அபிராமியும், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்குப் பின் சிம்பு - திரிஷாவும் இணைந்து நடித்துள்ளனர்.
‘நாயகன்’ படத்தைப் போலவே சில ஒற்றுமைகள் உள்ளது. இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் சக்திவேல் மற்றும் நாயக்கர். கதை கேங்ஸ்டர் வாழ்க்கையை சுற்றி நடக்கிறது. மேலும் பல காலகட்டங்களை உள்ளடக்கியது.
57
ஷேக்ஸ்பியர் கதையை தழுவியது
மணிரத்னம் இலக்கியத்திலிருந்து படங்களை எடுப்பது முதல் முறை அல்ல. ‘தளபதி’, ‘இராவணன்’ ஆகிய படங்கள் மகாபாரதம், இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டவை. அந்த வகையில் இந்த படம் ஷேக்ஸ்பியரின் Macbeth நாவலால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
67
ஜூன் 5 வெளியிடப்பட காரணம் என்ன?
ஜூன் 5-ம் தேதியை அதிர்ஷ்ட நாளாக ‘தக் லைஃப்’ டீம் பார்க்கிறது. ஏனென்றால் கமலின் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. மேலும் மணிரத்னத்தின் பிறந்தநாள் ஜூன் 2-ம் தேதி வருவதும் குறிப்பிடத்தக்கது.
77
‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம்
‘தக் லைஃப்’ திரைப்படம் 2018-ம் ஆண்டு வெளியான செக்கச் சிவந்த வானம் திரைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. அந்த திரைப்படமும் ஒரு குற்ற குடும்பத்திற்குள் அதிகாரப் போராட்டங்களை ஆராய்ந்தது.