2015ல நடந்தது அப்படியே 2025-ல் நடக்குதே.. டைம் லூப்பில் சிக்கிவிட்டதா தமிழ் சினிமா!

First Published | Jan 7, 2025, 9:53 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சம்பவங்கள் தற்போது 2025-ம் ஆண்டு நடைபெறுவதால் அதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2015 vs 2025

2024-ம் ஆண்டு பெரும்பாலான பெரிய நடிகர்களின் படங்கள் சொதப்பியதால் 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு நம்பிக்கை தரும் ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரின் படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ளன. அதிலும் குறிப்பாக கமல்ஹாசன் மற்றும் அஜித்துக்கு தலா இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளன. பல வருடங்களாக தமிழ் சினிமாவுக்கு எட்டாக் கனியாக இருக்கும் 1000 கோடி வசூல் இந்த ஆண்டு சாத்தியமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Ajith Movie Postponed

தள்ளிப்போன அஜித் படம்

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆண்டு நடந்த நிகழ்வுகள் அப்படியே 2025-ம் ஆண்டும் ரிப்பீட் ஆவதால் கோலிவுட் டைம் லூப்பில் சிக்கிவிட்டதா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஏனெனில் 2015-ம் ஆண்டு நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது 2025-ம் ஆண்டு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் அதே போல் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... நரசிம்மாவில் விஜயகாந்திற்கு ஷாக் டிரீட்மெண்ட் கொடுத்தது எப்படி? உண்மையை பகிர்ந்த நடிகர் வேணு அரவிந்த்!

Tap to resize

Vijay Movie Release

அக்டோபரில் விஜய் படம்

அதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த புலி திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆனது. அதோடு ஒப்பிடும் விதமாக இந்த ஆண்டு விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 69 திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். விஜய்யின் கடைசி படம் இதுவாகும். இப்படத்தில் நடித்து முடித்ததும் தீவிர அரசியலில் இறங்க உள்ளார் தளபதி.

Shankar vs Sundar C

சுந்தர் சி vs ஷங்கர்

2015-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த ஆம்பள திரைப்படமும், ஷங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த ஐ திரைப்படமும் போட்டிபோட்டு ரிலீஸ் ஆனது. அதேபோல் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா படத்துக்கு போட்டியாக இயக்குனர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

Karthi - Studio Green Movie

கார்த்தி - ஞானவேல் ராஜா படம்

நடிகர் கார்த்தி ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கடைசியாக நடித்த படம் கொம்பன். அப்படம் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதன்பின்னர் 10 ஆண்டுகள் கழித்து கார்த்தி, மீண்டும் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடித்துள்ள படம் வா வாத்தியாரே. இப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... தனுஷுக்கு போட்டியாக பாலிவுட்டில் எண்ட்ரியாகும் சிவகார்த்திகேயன் - முதல் படமே இவருடனா?

Latest Videos

click me!